சாம்பியன் மீண்டும் வருவார் - ரிஷப் பண்ட் தோள் மீது கை போட்டு ஹாயாக அமர்ந்து பேசிய யுவராஜ் சிங்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ரிஷப் பண்டை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.
 

Yuvraj Singh Meet Rishabh Pant, and he share a beautiful picture in his instagram page

ரிஷப் பண்ட் கார் விபத்தில் பலத்த காயமடைந்து டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மும்பையில் உள்ள கோகிலாபெண் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

India Playing XI 1st ODI: ரோகித், ஷ்ரேயாஸ் கிடையாது: ஹர்திக் பாண்டியா கேப்டன் ஓகே, யாரு சார் ஓபனிங்?

தசைநார்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தசை நார்களில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் வீடு திரும்பிய ரிஷப் பண்ட் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து இயற்கை காற்றை சுவாசித்து வந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ஹர்திக் இதை செய்தால் ரோகித்துக்கு பதிலாக அவர் தான் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் - சுனில் கவாஸ்கர்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதில, சிறிய விஷயம், பெரிய விஷயங்கள் மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றிற்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவில் ரிஷப் பண்ட் முதுகுப் பகுதியில் காயம்பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி  நடைபயிற்சி மேற்கொண்டார். இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங், ரிஷப் பண்டை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரிஷப் பண்ட் தனது வலது காலில் அடிபட்டிருந்த இடத்தில் கட்டு போட்டு தலையணை மீது வைத்திருந்த படி அமர்ந்திருந்தார்.

கோலி, ரோகித் சர்மாவுக்கு கிளம்பும் நேரம் வந்துருச்சா? பிருத்வி ஷாவிற்கு ஏன் வாய்ப்பு இல்லை? முரளி விஜய் கேள்வி!

அவரது தோள்பட்டையில் யுவராஜ் சிங் கை போட்டு ஹாயாக உட்கார்ந்து இருவரும் பேசியுள்ளனர். இது குறித்து யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குழந்தை படிகளில், இந்த சாம்பியன் மீண்டும் எழப்போகிறார். எப்பொழுதும் நேர்மறை மற்றும் வேடிக்கையான ஒருவன். கேட்ச் நன்றாக பிடிக்க கூடியவன். ரிஷப் பண்ட் உங்களுக்கு அதிக சக்தி இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அப்போது  எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், வரும் வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடருக்கான 16ஆவது சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையில், டெல்லி கேபில்டஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டிற்குப் பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios