இந்தியாவுக்கு பதிலடி உண்டு: ஸ்கெட்ச் போட்டு தூக்க தயார் - ஆஸ்திரேலியா பயிற்சியாளர் பேட்டி!
டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் வெற்றி பெறுவோம் என்று ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதியாக கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக ஆஸ்திரேலியா திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை மட்டும் ஆஸ்திரேலியா செய்துவிட்டால், அப்புறம் யாராலயும் அவர்களை தடுக்க முடியாது!
இந்த நிலையில், ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளார் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியிருப்பதாவது: டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு அணி நிர்வாகம் மற்றும் வீரர்களிடம் ஆலோசனை நடத்தினோம். அதோடு அணியை பேட்டிங்கை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தோம். இதற்காக 8 வீரர்கள் வரையில் பேட்டிங் செய்யும் அளவிற்கு அணியை வலுப்படுத்தியுள்ளோம். பந்து வீச்சில் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக ஆல் ரவுண்டர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், அதற்காக சில முயற்சிகள் செய்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை இழந்தது குறித்து நாங்கள் வருத்தப்படவில்லை. அதோடு, அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். பேட் கம்மின்ஸ் இல்லாதது அணிக்கு சற்று ஏமாற்றம் தான். ஸ்மித் சிறண்ட கேப்டனாக தனது திறமையை நிரூபித்துள்ளார். ஒரு நாள் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம். இந்தியாவை எதிர்கொள்வது கடினமாக இருந்தாலும், தக்க பதிலடி கொடுத்து, தொடரை கைப்பற்ற முயற்சி செய்வோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிக்கு நான் தான் பொளந்து கட்டப் போறேன் - மழை வரும், ஆனா வராது; மேட்ச் நடக்குமா? நடக்காதா?