50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்ற கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் – கண்காணித்த ரிஷப் பண்ட்!

காயம் காரணமாக ஓய்வில் இருந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தங்களது உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் இன்று 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடியுள்ளனர்.

Rishabh Pant Continuously Watching KL Rahul and Shreyas Iyer 50 Over Practice Match ahead of Asia Cup 2023

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் ஆட கூட வரவில்லை. இதையடுத்து, அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

Twitter Display Picture: டுவிட்டர் டிபியை மாற்றாத தோனி, கோலி!

இதே போன்று ஐபிஎல் தொடரில் பீல்டிங்கின் போது வலது காலின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய கேஎல் ராகுல், அதன் பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டு நீண்ட ஓய்விற்குப் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவர்களைத்தொடர்ந்து ரிஷப் பண்டும் கார் விபத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து, தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

அதிகாரப்பூர்வமான ப்ளூ டிக் மார்க்கை இழந்த பிசிசிஐ: என்ன காரணம் தெரியுமா?

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து, அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் இத்தனை நாட்களாக பெங்களூருவில் பயிற்சியை மேற்கொண்டு வந்த நிலையில், உடல் தகுதியை நிரூபித்த நிலையில், அணியில் இடம் பெற்றுள்ளார்.

வரும் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் ஆசிய கோப்பை 2023 தொடர் நடக்க உள்ளது. இதையடுத்து அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாத நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் இஷான் ஆகியோர் அணிக்கு கிடைத்துள்ளனர்.

Ravindra Jadeja Statue Pictures: சிலையோடு சிலையாக போஸ் கொடுத்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் புகைப்படம்!

எனினும், மிடில் ஆர்டரில் இந்திய வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதற்காக அவர்களது உடல்தகுதியை கருத்தில் கொண்டு இதுவரையில் இந்திய அணி அமைதி காத்து வந்தது. இந்த நிலையில், தான் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இருவரும் இன்று 50 ஓவர்கள் கொண்ட பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

வேஷ்டி குர்தாவில் சென்று குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசனம் செய்த ரோகித் சர்மா!

அவர்களது பயிற்சி போட்டியை ரிஷப் பண்ட் வேடிக்கைப் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடீயோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும், இறுதி முடிவை தேசிய கிரிக்கெட் அகாடமி கையில் தான் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் கண்டிப்பாக உடல் தகுதியை நிரூபித்து இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios