Twitter Display Picture: டுவிட்டர் டிபியை மாற்றாத தோனி, கோலி!
நாடு முழுவதும் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது டுவிட்டர் டிபியை இன்னும் மாற்றாமல் வைத்துள்ளனர்.
நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஹர் கர் திரங்கா பிரச்சாரத்திற்கு ஆதரவாக தங்களது சுயவிவரப் புகைப்படத்தில் இந்திய தேசியக் கொடியை காட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக பிசிசிஐ, ரோகித் சர்மா, ஆகாஷ் சோப்ரா என்று பிரபலங்கள் பலரும் டுவிட்டர் டிபியில் தேசியக் கொடி வரும்படி மாற்றியுள்ளனர்.
அதிகாரப்பூர்வமான ப்ளூ டிக் மார்க்கை இழந்த பிசிசிஐ: என்ன காரணம் தெரியுமா?
இருப்பினும், டுவிட்டரில் விரைவான கணக்கு மதிப்பாய்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ ப்ளூ டிக் மார்க்கை மீண்டும் 3 முதல் 4 நாட்களுக்குள் திரும்ப பெற முடியும். சுவாரஸ்யமாக, நேற்று தனது சுயவிவரப் படத்தை இந்தியக் கொடியாக மாற்றிய பிறகும், பிரதமர் மோடியின் கணக்கு, அரசாங்கம் அல்லது பலதரப்பு அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இன்னும் தங்களது டுவிட்டர் டிபியை மாற்றவில்லை.
Ravindra Jadeja Statue Pictures: சிலையோடு சிலையாக போஸ் கொடுத்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் புகைப்படம்!