Asianet News TamilAsianet News Tamil

இந்தியா 89க்கு ஆல் அவுட் ஆகியிருக்கும்: டுவிட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

Ravichandran Ashwin Immediate response to twitter troll
Author
First Published Dec 26, 2022, 10:48 AM IST

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது.

You should have handed this 🏆 to Mominul Haque, Who dropped that dolly.. had he bagged it, India all out for 89 for sure.. 😃 @ashwinravi99 https://t.co/Wmq87XiLm2

2 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 231 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 145 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கே எல் ராகுல் (2), சுப்மன் கில் (7), புஜாரா (6), விராட் கோலி (1), ஜெய்தேவ் உனட்கட் (13), ரிஷப் பண்ட் (9), அக்‌ஷர் படேல் (34) என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Oh no ! I thought I blocked you, oh sorry that’s the other guy. 🤔🤔🤔 what’s his name?? Yes Daniel Alexander that’s the name !!
Imagine what you both would do if India dint play cricket😂😂 https://t.co/FFqBvAPtDh

ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 2 ஆண்டுகள் தடையா?

இறுதியாக அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து நிலைத்து நின்று ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். அஸ்வின் 42 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து அஸ்வினுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு சுட்டிக் காட்டும் வகையில், நிப்ராஸ் ரம்ஜன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவிட்டிருந்தார். அதில், இந்த மேன் ஆஃப் தி மேட்ச் விருதை நீங்கள் கண்டிப்பாக வங்கதேச வீரர் மோமினல் ஹக்குக்கு தான் தர வேண்டும். ஏனென்றால், அவர் தான் உங்களது கேட்சை கோட்டை விட்டார். அவர் மட்டும் உங்களது கேட்சை பிடித்திருந்தால் இந்தியா 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும் என்று குறிப்பிடிருந்தார்.

சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அஸ்வின் நான் உங்களை பிளாக் செய்துவிட்டதாக நினைத்தேன். இல்ல இல்ல. அவர் மற்றொருவர். அவரது பெயர் டேனியல் அலெக்ஸாண்டர். இந்திய கிரிக்கெட் விளையாடாவிட்டால் நீங்கள் இருவரும் கற்பனை செய்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்

Follow Us:
Download App:
  • android
  • ios