Asianet News TamilAsianet News Tamil

ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 2 ஆண்டுகள் தடையா?

ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் எதிர்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

Dipa Karmakar banned for 2 year
Author
First Published Dec 26, 2022, 9:53 AM IST

கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டில் போட்டியில் 4ஆவது இடம் பிடித்தார் திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர். இந்தியாவின் சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார். இந்த நிலையில், அவர் ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் எதிர்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸுக்கு வலுசேர்க்கும் சாம் கரன்.. உத்தேச ஆடும் லெவன்

கடந்த மார்ச் மாதம் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு, தீபா கர்மாகரின் சஸ்பெண்ட் குறித்து வெளிப்படுத்திய போது கர்மாகரின் இடைநீக்கம் குறித்து செய்தி வெளியானது. ஊக்கமருந்து ஊகங்களுக்கு மத்தியில் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு அல்லது இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு தீபா கர்மாகரின் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இது குறித்து வாய் திறக்கவில்லை.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்

இந்த தடை குறித்து தீபா கர்மாகர் மற்றும் அவரது பயிற்சியாளர் பிஷ்வேஷ்வர் நந்தி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை முழுக்க முழுக்க தீபா கர்மாகரின் பயிற்சியாளரை தான் குற்றம் சாட்டி வருகிறது.  உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் உத்தரவுப்படி கடந்த 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து தீபா கர்மாகருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்

Follow Us:
Download App:
  • android
  • ios