IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். 
 

delhi capitals ideal playing eleven for ipl 2023

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் முடிந்துவிட்ட நிலையில், இந்த ஏலத்தில் ஏற்கனவே சிறப்பான அணியை பெற்றிருப்பதால் பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஏலத்தில் கலந்துகொண்டு செயல்பட்ட அணிகள் சில தான். அவற்றில் டெல்லி கேபிடள்ஸும் ஒன்று.

டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர். அதனால் அவர் டெல்லி கேபிடள்ஸ் அணியை கடந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் வேண்டிய வீரர்களை எல்லாம் எடுத்து அணியை செட் செய்துவிட்டார் என்பதால் டெல்லி அணி இந்த ஏலத்திற்கு முன்பாகவே 90 சதவிகித ஆடும் லெவன் காம்பினேஷன் உறுதியாகியிருந்தது. 

சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்

இந்த ஏலத்தில் ரைலீ ரூசோ, முகேஷ் குமார், மனீஷ் பாண்டே, ஃபிலிப் சால்ட், இஷாந்த் சர்மா ஆகிய 5 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது. டெல்லி அணியின் நெட் பவுலராக இருந்த முகேஷ் குமாரை அதிகபட்சமாக ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி.

டெல்லி கேபிடள்ஸின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் - பிரித்வி ஷா. 3ம் வரிசையில் மிட்செல் மார்ஷ் ஆடுவார். ஒருவேளை அவர் இல்லையென்றால், அந்த இடத்தில் ரைலீ ரூசோ ஆடுவார். கேப்டன் - விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 4ம் வரிசையில் பேட்டிங் ஆடுவார். 5ம் வரிசையில் சர்ஃபராஸ் கான், 6ம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸின் ரோவ்மன் பவல் இறங்குவார். 

ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக சேத்தன் சக்காரியா, கமலேஷ் நாகர்கோட்டி ஆகிய 2 இந்திய பவுலர்களுடன் 3வது பவுலராக முஸ்தாஃபிசுர் ரஹ்மான் - அன்ரிக் நோர்க்யா ஆகிய இருவரில் ஒருவரும் ஆடுவார்கள்.

AUS vs SA: நானே ஒதுங்கிக்கிறேன்.. விலகிய சீனியர் வீரர்! பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி அறிவிப்பு

டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்:

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ்/ரைலீ ரூசோ, ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்/அன்ரிக் நோர்க்யா, கமலேஷ் நாகர்கோட்டி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios