Asianet News TamilAsianet News Tamil

ஆர்சிபிக்கு எதிராக ஹீரோவான பிலிப் சால்ட் - ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்யும் பிருத்வி ஷா!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரரான பிருத்வி ஷா மோசமான பேட்டிங் காரணமாக அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
 

Prithvi Shaw Still Continue to his warm bench in Gym for Delhi Capitals in IPL 2023
Author
First Published May 8, 2023, 7:30 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கடுமையாக போராடி வருகின்றன. நேற்றைய போட்டியில் லக்னொ அணிக்கு எதிரான 2 புள்ளிகள் பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. சென்னையோ 13 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், லக்னோ அணியோ 11 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 4, 5, 6 மற்றும் 7ஆவது இடங்களில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் நடந்த சுவாரஸ்யம்: 7 பந்துக்கு ஆட்ட நாயகன் விருது பெற்ற கிளென் பிலிப்ஸ்!

இதே போன்று 8, 9 மற்றும் 10ஆவது இடங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 50ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

Ind vs Aus WTC Final: கேஎல் ராகுலுக்கு பதிலாக விருத்திமான் சஹா?

பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 பந்துகள் எஞ்சிய நிலையில், 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், தொடக்க வீரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அவர் தான் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் பிருத்வி ஷாவிற்கு பதிலாக 4 போட்டிகளில் இடம் பெற்ற பிலிப் சால்ட் 146 ரன்கள் எடுத்துள்ளார். 0, 59, 0, 87 என்று மொத்தமாக 146 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்துள்ளார்.

பிளாக் அண்ட் பிளாக் பைஜாமாவில் கலக்கும் கேப்டன்: கையில் கலாஷ் நிகாவ்வோடு விளையாடும் எம்.எஸ்.தோனி!

ஆனால், 6 போட்டிகளில் விளையாடிய பிருத்விஷா 12, 7, 0, 15, 0, மற்றும் 13 என்று மொத்தமாக 47 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மாறாக அவருக்குப் பதிலாக பிலிப் சால்ட் இடம் பெற்றார். இந்த நிலையில், தற்போது மீண்டும் இடம் பெறும் வகையில் ஜிம்மில் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதோடு, வெற்றியோ, தோல்வியோ ஆனால், கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போன்று நீங்கள் ஒரு போதும் இழக்க மாட்டீர்கள். நீங்கள் வெற்றி பெறுங்கள் அல்லது கற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரோகித் சர்மா ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது - சுனில் கவாஸ்கர்!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios