ரோகித் சர்மா ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது - சுனில் கவாஸ்கர்!

ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
 

Its Time for Rohit Sharma Should Take Rest From IPL 2023 remaining matches

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது. இன்னும் 4 போட்டிகள் உள்ள நிலையில் 4 போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக செல்ல முடியும். 

பிளாக் அண்ட் பிளாக் பைஜாமாவில் கலக்கும் கேப்டன்: கையில் கலாஷ் நிகாவ்வோடு விளையாடும் எம்.எஸ்.தோனி!

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து தனது மோசமான பார்மை வெளிப்படுத்தி வருகிறார். தனது 200ஆவது ஐபிஎல் போட்டியிலும் சரி, 201 ஆவது ஐபிஎல் போட்டியிலும் சரி டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் முறையில் ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில் (16 முறை) முதலிடம் பிடித்துள்ளார்.

Ind vs Aus WTC Final: கேஎல் ராகுலுக்கு பதிலாக விருத்திமான் சஹா?

இந்த சீசனில் இதுவரையில் ஆடிய 10 போட்டிகளில் 184 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், 2 முறை டக் அவுட். ரோகித் சர்மா 1, 21, 65, 20, 28, 44, 2, 3, 0, 0 என்று வரிசையாக சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. அவர் தொடர்ந்து சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து தான் இன்னும் மோசமான ஃபார்மில் இருப்பதை சுட்டிக் காட்டி வருகிறார். இதன் காரணமாக அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் உள்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

16 புள்ளிகளுடன் நம்பர் இடத்தில் குஜராத் டைடன்ஸ்: பிளே ஆஃப் ஓகே, இன்னும் 3 போட்டி இருக்கு!

இன்னும் 4 போட்டிகள் உள்ள நிலையில், அவரால் சிறப்பாக விளையாட முடியும். இருந்தாலும், தற்போதைய சூழலில் அவர் கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என்று அவர் கூறியுளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios