Ind vs Aus WTC Final: கேஎல் ராகுலுக்கு பதிலாக விருத்திமான் சஹா?

காயம் காரணமாக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுலுக்குப் பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

Ind vs Aus WTC Final: Wriddhiman Saha to replace KL Rahul?

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 51ஆவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

16 புள்ளிகளுடன் நம்பர் இடத்தில் குஜராத் டைடன்ஸ்: பிளே ஆஃப் ஓகே, இன்னும் 3 போட்டி இருக்கு!

ஆரம்பம் முதலே சஹா அதிரடி காட்டி ஆடினார். அவர் 20 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி குஜராத அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 21 பந்துகளிலும், 24 பந்துகளிலும் விஜய் சங்கர் அரைசதம் அடித்திருக்கிறார். தொடர்ந்து ஆடிய சஹா 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹாவின் பேட்டிங்கை கண்டு வியந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி கூட இன்ஸ்டா பதிவில் என்ன ஒரு வீரர் என்று பாராட்டியிருந்தார்.

ஒரு 50 கூட இல்ல, ஓவர் நைட்டுல ஹீரோவான அப்துல் சமாத் - கொண்டாடி தள்ளிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

இந்த சீசனில் இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடிய சஹா, 273 ரன்கள் வரையில் அடித்துள்ளார். இதில் 7 சிக்ஸர்கள், 35 பவுண்டரிகள் அடங்கும். அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்குப் பதிலாக விருத்திமான் சஹா இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக சென்னை அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

ஒரேயொரு நோபால் ஆட்டத்தையே தலைகீழே மாற்றிடுச்சு - வருத்தமாக பேசிய சஞ்சு சாம்சன்!

அதே போன்று தற்போது ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஹா, கேஎல் ராகுலுக்குப் பதிலாக இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய பந்து வீச்சாளரான தொட்டா கணேஷ் இந்த யோசனையை கூறியிருக்கிறார். வரும் ஜூன் 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சஹா பேட்டிங்கை பார்த்து வியந்த விராட் கோலி - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios