சஹா பேட்டிங்கை பார்த்து வியந்த விராட் கோலி - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சஹாவின் பேட்டிங்கைப் பார்த்து ஆர்சிவி வீரர் விராட் கோலி வியந்து பார்த்து பாராட்டியுள்ளார்.
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 51ஆவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி - சுழற்பந்தை சமாளிக்க 3ஆவதாக களமிறங்கினேன் - ரோகித் சர்மா விளக்கம்!
ஆரம்பம் முதலே சஹா அதிரடி காட்டி ஆடினார். அவர் 20 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி குஜராத அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 21 பந்துகளிலும், 24 பந்துகளிலும் விஜய் சங்கர் அரைசதம் அடித்திருக்கிறார். தொடர்ந்து ஆடிய சஹா 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 12.1 ஓவர்களில் 142 ரன்கள் குவித்துள்ளது.
போட்டினா சண்டை; அப்புறம் சமாதானம்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிராஜ் - சால்ட்; நல்ல வேல ஃபைன் இல்ல!
இந்த நிலையில், சஹாவின் பேட்டிங்கைப் பார்த்து வியந்த விராட் கோலி என்ன ஒரு வீரர் என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்துள்ளது. இதில் சுப்மன் கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 94 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கோலியின் ஆக்ரோஷத்தை அடக்கிய டெல்லி: ஒரு வழியா கை கொடுத்து சமாதானமான விராட் கோலி - கங்குலி!
இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி அதிகபட்ச ஸ்கோரை 227 என்று இன்று பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பைக்கு எதிராக 207/6, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 204/4 ரன்கள் மற்றும் சன்ரைசர்ச் ஹைதராபாத் அணிக்கு எதிராக 199/5 ரன்களை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.