13 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி - சுழற்பந்தை சமாளிக்க 3ஆவதாக களமிறங்கினேன் - ரோகித் சர்மா விளக்கம்!

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை தழுவியுள்ளது.
 

MI Skipper Rohit Sharma Gives Explanation about Mumbai Indians Loss and Batting at 3rd place

சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சென்னையில், மும்பைக்கு எதிராக 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டினா சண்டை; அப்புறம் சமாதானம்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிராஜ் - சால்ட்; நல்ல வேல ஃபைன் இல்ல!

தோல்விக்குப் பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: இன்று எல்லாமே தவறாக நடந்துள்ளது. பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. ரன்களும் அதற்கேற்ப அடிக்கவில்லை. இன்று நான் 3ஆவதாக இறங்குவதற்கு காரணம் அவர் இல்லாதது தான். இன்றைய போட்டியில் திலக் வர்ம விளையாடவில்லை. ஆகையால் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள நான் 3ஆவதாக இறங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்தது வேறு, அங்கு நடந்தது வேறாக அமைந்துவிட்டது.

அண்ணனா? தம்பியா? விட்டுக் கொடுக்கப்போவது யார்? லக்னோ - குஜராத் பலப்பரீட்சை!

பந்து வீச்சில் பியூஷ் சாவ்லா நன்றாக பந்து வீசினார். ஆனால், மற்ற பந்து வீச்சாளர்கள் கை கொடுக்கவில்லை. இன்றைய போட்டியின் மூலமாக நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். இந்த ஐபிஎல் சீசனில் எந்த அணிக்கும் சொந்த மண்ணில் சாதகம் இல்லை. பல அணிகள் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியுள்ளன. அடுத்த 2 போட்டிகள்ல் நாங்கள் மும்பையில் தான் விளையாட வேண்டும். அதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலியின் ஆக்ரோஷத்தை அடக்கிய டெல்லி: ஒரு வழியா கை கொடுத்து சமாதானமான விராட் கோலி - கங்குலி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios