பிளாக் அண்ட் பிளாக் பைஜாமாவில் கலக்கும் கேப்டன்: கையில் கலாஷ் நிகாவ்வோடு விளையாடும் எம்.எஸ்.தோனி!
புதிதாக பிளாக் அண்ட் பிளாக் பைஜாமாவில் தோனி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் எப்படியாவது பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் என்று போராடி வருகின்றன. தற்போது 16 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகிறது. இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில், அதுவும் உறுதியாகிவிடும். 2ஆவது இடத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் உள்ளது.
Ind vs Aus WTC Final: கேஎல் ராகுலுக்கு பதிலாக விருத்திமான் சஹா?
சென்னைக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளது. அதுவும், 2 போட்டி டெல்லி அணிக்கு எதிராகவும், ஒரு போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் உள்ளது. எப்படியும், இதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட சென்னைக்கு 4 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலமாக சிஎஸ்கே அணி 17 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு பெறும்.
16 புள்ளிகளுடன் நம்பர் இடத்தில் குஜராத் டைடன்ஸ்: பிளே ஆஃப் ஓகே, இன்னும் 3 போட்டி இருக்கு!
கேஜிஎஃப் 2 படத்தில் நடிகர் யாஷ் கையி வைத்திருக்கும் கலாஷ் நிக்காவ் போன்று தோனி கையில் வைத்து வீடியோ கேம்ஸ் விளையாடும் வீடியோவை சிஎஸ்கே டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
வரும் 10 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 55ஆவது போட்டி நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 6ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், எம்.எஸ்.தோனி பிளாக் அண்ட் பிளாக் பைஜாமா உடையில் இருக்கும் புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அனைத்து சிஎஸ்கே வீரர்களின் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை எம்எஸ் தோனி பரிசாக வழங்கினார்.