ஐபிஎல் வரலாற்றில் நடந்த சுவாரஸ்யம்: 7 பந்துக்கு ஆட்ட நாயகன் விருது பெற்ற கிளென் பிலிப்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிளென் பிலிப்ஸ் வெறும் 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரால்ஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 214 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அல்மோன்ப்ரீத் சிங் 33 ரன்கள், அபிஷேக் சர்மா 55 ரன்கள், ராகுல் திரிபாதி 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ரோகித் சர்மா ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது - சுனில் கவாஸ்கர்!
பின்னர் வந்த ஹென்ரிச் கிளாசன் 26 ரன்னும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது தான் கிளென் பிலிபிஸ் களமிறங்கினார். அவர், 7 பந்துகளில் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரிகள் உள்பட 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் முதல் 3 பந்தில் 3 சிக்ஸர்கள் விளாசினார். 4ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். இதன் மூலமாக 4 பந்துகளில் 22 ரன்கள் குவித்துவிட்டார்.
பிலிப்ஸின் அதிரடி ஆட்டத்தாலும், கடைசியாக போடப்பட்ட நோபால் காரணமாகவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அப்துல் சமாத் சிக்ஸர் அடித்து கொடுத்ததன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 217 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
பிளாக் அண்ட் பிளாக் பைஜாமாவில் கலக்கும் கேப்டன்: கையில் கலாஷ் நிகாவ்வோடு விளையாடும் எம்.எஸ்.தோனி!
போட்டியின் 19ஆவது ஓவரில் 22 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கிளென் பிலிப்ஸ் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த அதுவும் 7 பந்துகளில் ஆட்டநாயகன் விருது பெறுவது என்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தார். அந்த சாதனையை தற்போது கிளென் பிலிப்ஸ் முறியடித்துள்ளார்.
Ind vs Aus WTC Final: கேஎல் ராகுலுக்கு பதிலாக விருத்திமான் சஹா?