பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 2ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் ஆட வரும் போது டவர் லைட் கோளாறு ஏற்பட்ட நிலையில், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் நிதிஷ் ராணா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

IPL 2023 KKR: பிராவோவின் விக்கெட் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எக்ஸ்பிரஸ் உமேஷ் யாதவ்!

அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டியிங் ஆடியது. இதில், ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஜோடி ஆரம்பமே அடிதடி காட்டினர். சிம்ரன் சிங் 23 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த ராஜபக்‌ஷே 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜித்தேஷ் சர்மா (21), ஷிகர் தவான் (40), ஷிகந்தர் ராசா (16), சாம் கரண் (26 நாட் அவுட்), ஷாருக்கான் (11 நாட் அவுட்) என்று ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் கிங்ஸ் 191 ரன்கள் சேர்த்தது.

IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது - கிறிஸ் கெயில்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் டிம் சவுதி 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் 192 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதல் முறையாக ரஹ்மனுல்லா குர்பாஸ் களமிறங்கினார். மந்தீப் சிங் மற்றும் குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். ஆனால், மைதானத்தில் உள்ள டவர் லைட் சரிவர வேலை செய்யாததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஐஐடி மெட்ராஸின் ஐபிஎல் ’கிரிக்கெட் அண்ட் கோடிங்’ தரவு அறிவியல் போட்டி அறிவிப்பு!

எனினும், சிறிது நேரம் மைதானத்திலேயே பஞ்சாப் மற்றும் கொல்கத்தா வீரர்கள் இருந்தனர். அதன் பிறகு மைதானத்தை விட்டு வீரர்கள் அனைவரும் வெளியேறினர். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் போட்டி தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு டவர் லைட் சரி செய்யப்பட மைதானத்திற்கும் போதுமான வெளிச்சம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023 CSK: ஐபிஎல்லில் புதிய அத்தியாயம் படைத்த தோனி: சிஎஸ்கேவுக்கு 200ஆவது சிக்ஸ் அடித்து கொடுத்த தல!

Scroll to load tweet…