Pakistan Visa: ஒரு வழியாக பாகிஸ்தானுக்கு விடிவு காலம் பொறந்தாச்சு; விசா கிடைத்து இந்தியா வரும் பாக். டீம்!
பாகிஸ்தானுக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது விசா கிடைத்துள்ள நிலையில், இந்தியா வருகிறது.
இந்தியாவில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி 13 ஆவது உலகக் கோப்பை பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
ICC ODI World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான புதிய போஸ்டர் வெளியீடு!
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது. இலங்கை மற்றும் வங்கதேச அணி மட்டும் இதுவரையில் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவிக்கவில்லை. வரும் 28 ஆம் தேதி தான் வீரர்களை உறுதி செய்வதற்கான கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக வார்ம் அப் போட்டி நடக்க உள்ள நிலையில், ஏற்கனவே நெதர்லாந்து அணி பெங்களூருவில் பயிற்சியை தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவும் இந்தியா வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்ந்து விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது.
வரும் 29 ஆம் தேதி உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கிறது. அதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர்களிடையே ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்பதாக 2 நாட்கள் துபாய்க்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்களின் துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக ஐசிசியிடம் புகார் அளித்திருந்தது. வார்ம் அப் போட்டிக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், அதற்கு முன்னதாக விசா கிடைத்து இந்தியா வந்தால் தான் பாகிஸ்தான் அணிக்கு ஓய்விற்கு நேரம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு தற்போது விசா கிடைத்துள்ளது. மத்திய அரசு தரப்பில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அளிக்கப்பட்டுள்ளது.