Asia Games: வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி – கிரிக்கெட்டிற்கு முதல் முறையாக தங்கம் கைப்பற்றி சாதனை!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக கிரிக்கெட்டிற்கு என்று தங்கம் வென்றது.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். நேற்று மகளிருக்கான கிரிக்கெட் முதல் அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில், இலங்கை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
India vs Australia: நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லிற்கு ரெஸ்ட் கொடுக்க முடிவு!
இந்த நிலையில் இந்திய மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிக்கான இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் குவித்தது. இதில், ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் குவித்தனர்.
எளிய இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட் கீப்பர் அனுஷ்கா சஞ்சீவனி 1 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விஷ்மி குணரத்ன டக் அவுட்டில் வெளியேறினார். இதையடுத்து ஹசினி பெரேரா மற்றும் நிலாக்ஷி டி சில்வா இருவரும் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். எனினும், அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பெரேரா 25 ரன்களில் ஆட்டமிழக்க டி சில்வா 23 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு வந்த ஓஷதி ரணசிங்க 19 ரன்கள் சேர்த்தார். இறுதியாக, சுகந்திகா குமாரி 5 ரன்களில் வெளியேறினார். இனோஷி பிரியதர்ஷினி 1 ரன்னிலும், உதேசிகா பிரபோதனி 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர். எனினும், 20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பந்து வீச்சு தரப்பில் நேற்றைய போட்டியின் மூலமாக அறிமுகமான டைட்டஸ் சாது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ராஜேஷ்வரி கெயக்வாட் 2 விக்கெட்டும், தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் கைப்பற்றியுள்ளது.
மேலும், இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல் விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Asian Games 2023: 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் டீம் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது!