Asian Games 2023: 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் டீம் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் டீம் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் 10 பதக்கங்களுடன் 6 ஆவது இடம் பிடித்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், நேற்று முதல் மகளிர் கிரிக்கெட், துடுப்பு படகு போட்டி, ஏர் ரைபிள் என்று பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே இந்தியா 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 8ஆவது இடம் பிடித்தது.
இந்த நிலையில், இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர். மேலும், கொரிய குடியரசு 1890.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. சீனா வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs AUS: விட்டு விட்டு மழை: ஓவர்கள் குறைப்பு: ஆஸ்திரேலியாவிற்கு 317 ரன்கள் வெற்றி இலக்கு!
அதன் பிறகு நடந்த மற்றொ பிரிவு போட்டியில் ஆண்களுக்கான 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் டீம் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் 10 பதக்கங்களுடன் 6 ஆவது இடம் பிடித்துள்ளது. ஆதர்ஷ் சிங், அனிஷ் மற்றும் சிது விஜயவீர் ஆகியோர் 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் டீம் பிரிவில் 1718 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். தங்கப் பதக்கம் கைப்பற்ற 47 புள்ளிகள் பின் தங்கியிருந்தனர். சீனா, தங்கம் கைப்பற்றியுள்ளது.
IND vs AUS: கடைசில ஆட்டம் காட்டிய அபாட்; ஆஸி, 217க்கு ஆல் ரவுட்; தொடரை கைப்பற்றிய டீம் இந்தியா!