பப்ஜி விளையாட விரும்பிய மகனுக்கு துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்த தந்தை: சீனாவை தோற்கடித்து புதிய உலக சாதனை!
பப்ஜி விளையாட ஆசைப்பட்ட மகனுக்கு, தந்தை துப்பாக்கி சுட கற்றுக் கொடுக்கவே இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர். ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்தவர் திவ்யான்ஷ் சிங் பன்வார். இவர், தனது இரு நண்பர்களான ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோருடன் இணைந்து ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் போட்டியிட்டார்.
Asian Games 2023: 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் டீம் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது!
இதில், இந்த மூவர் குழுவானது புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இவர்கள் மூவரும் இணைந்து 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் கைப்பற்றினர். இதற்கு முன்னதாக சீனா 1893.3. புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்திருந்தது. இந்த உலக சாதனையை முறியடித்து மூவர் குழுவினர் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த குழு போட்டியில், மூன்று துப்பாக்கி சுடும் வீரர்களும் இணைந்து இந்த சாதனையை முறியடித்துள்ளனர். இந்த மதிப்பெண்களில் ருத்ரன்காஷ் பாட்டீல் 632.5 மதிப்பெண்களும், ஐஸ்வர்யா தோமர் 631.6 மதிப்பெண்களும், திவ்யான்ஷ் பன்வார் 629.6 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். ஜெய்ப்பூரில் பிறந்த திவ்யன்ஷ் இதற்கு முன் பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது சீனாவிலிருந்து ஜெய்ப்பூர் வரையிலும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. மகன் தங்கம் வெல்வார் என்று ஆசையோடு காத்திருக்கும் தந்தைக்கு இது ஒரு இனிப்பான செய்தியாக அமைந்துவிட்டது.
IND vs AUS: விட்டு விட்டு மழை: ஓவர்கள் குறைப்பு: ஆஸ்திரேலியாவிற்கு 317 ரன்கள் வெற்றி இலக்கு!
திவ்யான்ஷின் பெற்றோர் ஜெய்ப்பூர் மருத்துவப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இருவரும் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள். ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஷூட்டிங் அகாடமியில் பயிற்சி செய்த திவ்யன்ஷ் அதன் பிறகு பல போட்டிகளில் விளையாடினார். அபினவ் பிந்த்ரா மற்றும் பூர்வி சண்டேலை ஆகியோரை தனது ரோல் மாடலாக கருதிய திவ்யான்ஷ், PUBGயை விரும்பினார். மகனின் இந்த பொழுதுபோக்கைக் கட்டுப்படுத்த, அவனது பெற்றோர் அவருக்கு துப்பாக்கிச் சூடு கற்றுத் தரத் தொடங்கினர். மகனுக்கு துப்பாக்கி சுடுதல் பிடிக்கவே அதன் மூலமாக இப்போது நாடு முழுவதும் பெருமை சேர்த்துள்ளார்.
IND vs AUS: கடைசில ஆட்டம் காட்டிய அபாட்; ஆஸி, 217க்கு ஆல் ரவுட்; தொடரை கைப்பற்றிய டீம் இந்தியா!