Hangzhou Asian Games 2023: ஆண்கள் ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி – 28ஆம் தேதி ஜப்பானை எதிர்கொள்கிறது!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் இந்தியா 16-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் மந்தீப் சிங் இருவரும் ஹாட்ரிக் கோல் அடித்தனர்.
தொடர்ந்து போராடிய சிங்கப்பூர் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. எனினும், இந்திய வீரர்கள் வருண் குமார் மற்றும் அபிஷேக் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். மேலும், லலித் குமார் உபாத்யாய், விவேக் சாகர், குர்ஜந்த் சிங், மன்பிரீத் சிங் மற்றும் சம்ஷேர் சிங் ஆகியோர் எதிரணியை வீழ்த்தி ஒரு கோல் அடித்தனர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி கோல் அடித்து முன்னிலையில் இருந்த நிலையில், 53 ஆவது நிமிடத்தில் சிங்கப்பூர் அணி ஒரு கோல் அடித்தது. இதையடுத்து கடைசியாக இந்திய அணி 2 கோல் அடிக்கவே இந்தியா 16-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி ஜப்பான் அணியையும், 30 ஆம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.
India vs Australia: நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லிற்கு ரெஸ்ட் கொடுக்க முடிவு!