முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் கடத்தப்பட்டாரா? விளக்கம் கொடுத்த கவுதம் காம்பீர்!
இந்திய அணிக்கு முதல் முறையாக கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவை பகிருந்து, இல்லை இல்லை, கபில் தேவ் நலமாக இருக்கிறார் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில் தேவ். கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று 131 டெஸ்ட், 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முறையே 5248 ரன்களும், 3783 ரன்களும் எடுத்துள்ளார். அதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 253 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கபில் தேவ் வாயில் துணியால் கட்டப்பட்டு கடத்தப்பட்டது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் உண்மையில், அது கபில் தேவ் கிடையாது. கபில் தேவ் நலமாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். அது கபில் தேவ் போன்று இருக்கும் ஒருவர். விளம்பர நிகழ்சிக்காக எடுத்தப்பட வீடியோ போன்று தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
India vs Australia: நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லிற்கு ரெஸ்ட் கொடுக்க முடிவு!