World Cup Anthem: உலகக் கோப்பைக்கான ஆந்தம் பாடல் வீடியோவில் ரன்வீர் சிங்: ப்ரிதம் இசையில் வைரலாகும் வீடியோ!
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ ஆந்தம் டல் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி 13 ஆவது உலகக் கோப்பை பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
முதல் உலகக் கோப்பையிலேயே துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை!
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணி மட்டும் இதுவரையில் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவிக்கவில்லை.
வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டி நடக்கிறது. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான பாடல் வெளியாகியுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இடம் பெற்றுள்ளார். மேலும், ப்ரிதம் இசையமைத்துள்ளார். Dil Jashn Bole என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு ரன்வீர் சிங் ரயிலில் வந்து பாடல் பாடுவது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!
தில் ஷஸன் போலே என்று தொடங்கும் ஆந்தம் பாடலில் வெறும் ஆட்டமும், பாட்டமும் தான் இருக்கிறதே தவிர, எந்தவித கிரிக்கெட் காட்சிகளும் இடம் பெறவில்லை. மாறாக மொபைலில் அவுட் என்று காண்பிக்கப்படுகிறது. மேலும், ரயிலுக்குள்ளாகவே மைதானம் போன்று காட்டப்பட்டு அதில் கிரிக்கெட் ஆடுவது போன்றும் நடுவர் சிக்ஸர் கொடுப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், அனைத்து நாடுகளின் கொடிகளும் அந்த ஆந்தம் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இறுதியாக ஒண்டே எக்ஸ்பிரஸ் என்று டிக்கெட் மாதிரி ஒன்றை ரன்வீர் சிங் எடுத்து கொடுக்கிறார்.
இந்த ஆந்தம் பாடலுக்கு ஷலோக் லால் மற்றும் சாவேரி வர்மா ஆகியோர் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். ப்ரீதம், நகாஷ் அஜீஸ், ஸ்ரீராம சந்திரா, அமித் மிஸ்ரா, ஜோனிதா காந்தி, ஆகாசா, சரண் ஆகியோர் பாடல் பாடியுள்ளனர்.