Asianet News TamilAsianet News Tamil

முதல் உலகக் கோப்பையிலேயே துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை!

பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் புதிய தேசிய சாதனையுடன் இந்திய வீராங்கனை நிஷால் வெள்ளி வென்றுள்ளார்.

Nischal wins silver at Shooting World Cup 2023 in Rio
Author
First Published Sep 20, 2023, 1:08 PM IST

பிரேசில் நாட்டிலுள்ள் ரியோ டிஜெனீரோவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை நிஷால் தனது முதல் உலகக் கோப்பையில் 458 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். அதோடு, தகுதிச் சுற்றில் 592 புள்ளிகள் பெற்றதன் மூலமாக அஞ்சும் மோட்ஜிலினின் (591 புள்ளிகள்) தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

CWC 2023: இழுபறியில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்: உலகக் கோப்பைக்கான அணி வீரர்களை அறிவிப்பதில் தாமதம் ஏன்?

நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியாவிலிருந்து 16 பேர் பங்கேற்றனர். இதில், ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக வீரர் இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!

Follow Us:
Download App:
  • android
  • ios