CWC 2023: இழுபறியில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்: உலகக் கோப்பைக்கான அணி வீரர்களை அறிவிப்பதில் தாமதம் ஏன்?
பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் உலகக் கோப்பைக்கான தங்களது அணி வீரர்களை இன்னும் அறிவிக்கவில்லை.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன்னும் 14 நாட்களில் இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டியில் நடப்பி சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.
ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!
உலகக் கோப்பை 2023 லீக் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
10 அணிகள்:
இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா.
10 மைதானங்கள்:
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா.
வார்ம் அப் போட்டிகள்:
உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக செம்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டிகள் ஹைதராபாத், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களில் நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை அறிவித்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தான், இலங்கை, அணிகள் இதுவரையில் தங்களது அணி வீரர்களை அறிவிக்கவில்லை. எனினும், இதுவரையில் அறிவிக்கப்பட்ட அணிகள் வரும் 28 ஆம் தேதிக்குள்ளாக அணி வீரர்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான், அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், குஸ் அட்கின்சன், ஜேசன் ராய்.
நியூசிலாந்து:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, டிம் சவுதி, மார்க் சேப்மேன், லாக்கி ஃபெகுசன், மேட் ஹென்றி, டாம் லேதம் (துணை கேப்டன்), மிட்செல் சாண்ட்னர், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, வில் யங்.
தென் ஆப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், சிசாண்டா மகாளா, கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, கஜிகோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, கெரால்டு கோட்ஸி, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ரஸிவ் வான் டெர் டுசென்.
ஆப்கானிஸ்தான்:
இப்ராஹிம் ஜத்ரன், ரியாஸ் ஹசன், நஜ்புல்லா ஜத்ரன், ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா, முகமது நபி, அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபாரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக், இக்ராம் அலிகில், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்).
நெதர்லாந்து:
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக். ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பாரேசி, சாகிப் சுல்பிகர், ஷாரிஸ் அகமது, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்
இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச ஆகிய அணி வீரர்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், வரும் 28 ஆம் தேதி அணி வீரர்களை இறுதி செய்ய கடைசி நாள் ஆகும்.
- Anrich Nortje
- Axar Patel
- Bangladesh World Cup Squad
- CWC 2023
- Cricket World Cup 2023
- Dushmantha Chameera
- Haris Rauf
- ICC Mens Cricket World Cup 2023
- India Team Squad
- India World Cup Squad
- Maheesh Theekshana
- Naseem Shah
- ODI World Cup 2023
- Pakistan Squad for World Cup
- Shreyas Iyer
- Squads of All Teams
- Sri Lanka World Cup Squad
- Team India
- Tim Southee
- Wanindu Hasaranga
- World Cup 2023