World Cup 2023: அமிதாப் பச்சன், சச்சினைத் தொடர்ந்து ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய ஜெய் ஷா!

அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்திற்கு உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

BCCI Secretary Jay Shah presented the ICC Mens Cricket World Cup 2023 golden ticket to Rajinikanth rsk

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனையும் நடந்து முடிந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு ஒரு டிக்கெட் மட்டும் ரூ.57 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

World Cup Golden Ticket: கோல்டன் டிக்கெட் என்றால் என்ன? உலகக் கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு அது வழங்கப்படும்?

இவ்வளவு ஏன், ரசிகர் ஒருவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக கிட்டத்தட்ட 2000 கிமீ தூரம் வரையில் பயணம் செய்து டிக்கெட் வாங்க வந்ததாகவும் கூறப்பட்டது. இப்படி டிக்கெட் கிடைக்க ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் போராடி வரும் நிலையில், கோல்டன் டிக்கெட் திட்டத்தை பிசிசிஐ அறிவித்தது.

ODI World Cup 2023: ஷதாப் கானுக்கு வாய்ப்பு மறுப்பு? உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் டீமில் யாருக்கு இடம்?

உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்ட நாளன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இந்த கோல்டன் டிக்கெட் பெறும் பிரபலங்கள் இந்தியாவில் நடக்கும் அனைத்து உலக்க கோப்பை போட்டிகளையும் விஐபி சீட்டில் அமர்ந்து பார்க்க முடியும். இந்த டிக்கெட்டிற்காக அவர்கள் பணம் கொடுக்க தேவையில்லை. இந்த கோல்டன் டிக்கெட்டானது இந்தியாவில் இருக்கும் பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

India vs Australia: இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு: ஆஸ்திரேலியாவை தோற்கடிக்குமா இந்தியா?

உலகக் கோப்பைக்கான முதல் கோல்டன் டிக்கெட்டானது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, உலகக் கோப்பை கோல்டன் டிக்கெட்டை ரஜினிகாந்திற்கு வழங்கியுள்ளார்.

ஆஸி, சீரிஸ் தேவையில்லாத ஒன்று, இந்திய வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு உண்டு – வாசீம் அக்ரம் எச்சரிக்கை!

 

ரஜினிகாந்த், சினிம்மா புத்திசாலித்தனத்தின் உண்மையான உருவகம். பழம்பெரும் நடிகர், மொழி மற்றும் கலாச்சாரத்தை கடந்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 எங்களின் புகழ்பெற்ற விருந்தினராக அவர் இருப்பதன் மூலமாக கிரிக்கெட்டை மென்மேலும் ஒளிரச் செய்யும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios