ஆஸி, சீரிஸ் தேவையில்லாத ஒன்று, இந்திய வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு உண்டு – வாசீம் அக்ரம் எச்சரிக்கை!

உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா தொடர் தேவைதானா? இதன் மூலமாக இந்திய அணி வீரர்கள் காயம் அடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசீம் அக்ரம் கூறியுள்ளார்.

Wasim Akram Warns Team India, Aussie, series is unnecessary, Indian players are likely to get injured  rsk

இலங்கைக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து நேற்றிரவு விமானம் மூலமாக இந்திய அணி வீரர்கள் மும்பைக்கு திரும்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு முக்கிய காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் தொடர் தான்.

ஆஸி.யுடன் ஒருநாள் தொடர்: இந்திய அணியில் மீண்டும் அஸ்வின்! ரோஹித், கோலிக்கு இடம் இல்லை!

ஏற்கனவே இந்தியாவிற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதுவும், முதல் 2 போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒரு பயிற்சியாக இருக்கும் வகையில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ரோகித், கோலி, ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு: கேப்டனான கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், அஸ்வினுக்கு வாய்ப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா முதல் கட்டமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது. 2ஆவது ஒரு நாள் போட்டி இந்தூரிலும், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டிலும் நடைபெறுகிறது.

இந்த ஒரு நாள் தொடர் முடிந்த பிறகு உலகக் கோப்பை பயிற்சி போட்டியும், அதன் பிறகு 13ஆவது சீசனுக்கான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

ரோகித், கோலி, பும்ரா, பாண்டியாவிற்கு ஓய்வு? ஆஸ்திரேலியா சீரிஸில் யாருக்கு வாய்ப்பு?

அதன் பிறகு 4 நாட்கள் இடைவெளியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

நவம்பர் 23 – இந்தியா – ஆஸ்திரேலியா – முதல் டி20 – விசாகப்பட்டினம் – இரவு 7 மணி

நவம்பர் 26 – இந்தியா – ஆஸ்திரேலியா – 2ஆவது டி20 – திருவனந்தபுரம் – இரவு 7 மணி

நவம்பர் 28 – இந்தியா – ஆஸ்திரேலியா – 3ஆவது டி20 – கவுகாத்தி – இரவு 7 மணி

டிசம்பர் 01 – இந்தியா – ஆஸ்திரேலியா – 4ஆவது டி20 – நாக்பூர் – இரவு 7 மணி

டிசம்பர் 03 - இந்தியா – ஆஸ்திரேலியா – 5ஆவது டி20 – ஹைதராபாத் – இரவு 7 மணி

SL vs IND: பாஸ்போர்ட்டை ஹோட்டல் அறையில் மறந்து வைத்துவிட்ட வந்த ரோகித் சர்மா – கிண்டல் செய்த வீரர்கள்!

இந்த நிலையில், தான் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசீம் அக்ரம் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

அதற்கு முக்கிய காரணம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகு அடுத்தடுத்த மாநிலங்களுக்கு பயணிக்க வேண்டும். அப்படியிருக்கும் போது ஒரு நாள் தொடருக்கும் இந்திய அணி வீரர்கள் 3 மாநிலங்களுக்கு பயணிக்க வேண்டும். ஒருவேளை உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்களை தயாராக வைக்க வேண்டும் என்றால், அவர்களை கொண்டு ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரில் விளையாடலாம் என்று தெரிவித்துள்ளார்.

IND s AUS: ஒருநாள் தொடரை கைப்பற்ற பிளானோடு வரும் ஆஸ்திரேலியா: ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட டீம் அறிவிப்பு!

இதற்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து வீரர்கள் காயமடைந்த நிலையில், இந்திய வீரர்களும் காயமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios