Asianet News TamilAsianet News Tamil

IND s AUS: ஒருநாள் தொடரை கைப்பற்ற பிளானோடு வரும் ஆஸ்திரேலியா: ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட டீம் அறிவிப்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 22 ஆம் தேதி இந்தியாவில் நடக்க இருக்கிறது.

Australia 18 Member ODI Squad announced against Team India rsk
Author
First Published Sep 18, 2023, 2:13 PM IST

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் 10 மைதானங்களில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

SL vs IND: விராட் கோலி மாறி நடந்து காட்டிய இஷான் கிஷான் – வைரலாகும் வீடியோ!

ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கின்றன. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22 ஆம் தேதி மொஹாலியில் நடக்கிறது. 2ஆவது ஒரு நாள் போட்டி வரும் 25 ஆம் தேதி இந்தூரில் நடக்கிறது. 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி 27 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்கள் -ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், மூன்று போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதையடுத்து கடைசியாக நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலமாக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

Si Lanka vs India: வங்கதேச போட்டியில் தோல்வி, ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித்!

இதே போன்று ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றிய உத்வேகத்தோடு இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேறும் இந்திய வீரர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கின்றனர். ஆனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள்:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபாட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் இங்க்லிஸ், ஸ்பென்ஸர் ஜான்சர், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

SL vs IND: ஆசிய கோப்பை இந்தியா சாம்பியன்: விருது வென்றவர்களின் பட்டியல்: யார் யாருக்கு என்னென்ன விருது?

 

Follow Us:
Download App:
  • android
  • ios