சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்கள் -ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!

இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதற்கு சிராஜ் நீங்கள் ஒரு மார்வெல் அவெஞ்சர் என்று ஆனந்த் மஹிந்திரா டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Fans asked to Anand Mahindra to give SUV car to Mohammed Siraj rsk

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால், ஒவ்வொரு ஓவருக்கும் இலங்கை அணிக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில், பெரேரா ஆட்டமிழந்தார். 2ஆவது ஓவர் மெய்டனாக வீசப்பட்டது. 3ஆவது ஓவரில் 1 ரன் எடுக்கப்பட்டது. 4ஆவது ஓவரில் தான் இலங்கை அணியின் ஒட்டுமொத்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்தனர்.

Si Lanka vs India: வங்கதேச போட்டியில் தோல்வி, ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித்!

முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரில் மட்டுமே 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். பதும் நிசாங்கா, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா என்று 4 முக்கியமான விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில், சில்வா 4 ரன்களிலும், நிசாங்கா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க மற்ற இருவரும் டக் அவுட்டில் வெளியேறினார்.

மறுபடியும், 6ஆவது ஓவரில் கேப்டன் தசுன் ஷனாகாவை டக் அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பிறகு 12 ஆவது ஓவரில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். இப்படி இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரையும் முகமது சிராஜ் ஆட்டமிழக்கச் செய்து இலங்கை ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என்று ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

SL vs IND: ஆசிய கோப்பை இந்தியா சாம்பியன்: விருது வென்றவர்களின் பட்டியல்: யார் யாருக்கு என்னென்ன விருது?

எஞ்சிய 3 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா கைப்பற்றவே இலங்கை 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் ஆட்டமிழந்தது. இதில், பும்ரா 1 விக்கெட்டும், பாண்டியா 3 விக்கெட்டும் கைப்பற்ற, முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். பின்னர் ஆடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக 8ஆவது முறையாக ஆசிய கோப்பையை டீம் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜிற்கு பாராட்டும் தெரிவிக்கும் வகையில் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நம் எதிரிகளுக்காக என் இதயம் அழுததை நான் இதுவரை உணர்ந்ததில்லை என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் மீது ஒரு அமானுஷ்ய சக்தியை நாம் கட்டவிழ்த்துவிட்டோம் போல. சிராஜ் நீங்கள் ஒரு மார்வெல் அவெஞ்சர் என்று கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை 2023 சாம்பியனான டீம் இந்தியா - மோகன்லால், நிதின், மகேஷ் பாபு, வெங்கடேஷ் பிரபலங்கள் வாழ்த்து!

இதையடுத்து ஆனந்த் மஹிந்திராவிடம் சார், நீங்கள் முகமது சிராஜிற்கு கார் கொடுங்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா அதைச் செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இறுதியாக ஆட்டநாயகனுக்காக வழங்கப்பட்ட தனது பரிசுத் தொகையை முகமது சிராஜ் மைதான ஊழியர்களுக்கு வழங்கியதை பகிர்ந்து, இது உங்கள் செல்வம் அல்லது உங்கள் பின்னணியில் இருந்து வரவில்லை. அது உள்ளிருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பாகு என்ற பகுதியில் நடந்து முடிந்த செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா எக்ஸ்யுவி 400 எலக்ட்ரிக் எஸ்யுவி கார் ஒன்றை பரிசாக வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த கப்பா டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, முகமது சிராஜ, டி நடராஜன், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருக்கு மஹிந்திரா தார் எஸ்யுவி காரை பரிசாக வழங்கியது.

Sri Lanka vs India: 5 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய முகமது சிராஜ்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios