ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 8 ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியாவிற்கு சினிமா பிரபலங்களான மோகன்லால், வெங்கடேஷ், மகேஷ் பாபு, நிதின் என்று சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி இன்று கொழும்புவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணிக்கு அடி மேல் அடிதான். ஜஸ்ப்ரித் பும்ரா பிள்ளையார் சுழி போட்டு முதல் விக்கெட் எடுக்க, அடுத்து வந்த முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Sri Lanka vs India: 5 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய முகமது சிராஜ்!
அதன் பிறகு 2 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். பும்ரா, சிராஜ் வழியை பின்பற்றி ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இறுதியாக இலங்கை 50 ரன்கள் மட்டுமே எடுத்து. பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அணியை வெற்றி பெறச் செய்தனர்.
Sri Lanka vs India: 24 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையை பழி தீர்த்த இந்தியா; கங்குலி ஹேப்பி அண்ணாச்சி!
இதன் மூலமாக இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது. மேலும், ரோகித் சர்மா 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி கொடுத்தார். இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு சினிமா பிரபலங்களான மோகன்லால், நிதின், மகேஷ் பாபு, வெங்கடேஷ் ஆகியோர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சத்குருவும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மோகன்லால் கூறியிருப்பதாவது: ஆசிய கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள்! இந்த உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்வோம், வரவிருக்கும் போட்டியில் இன்னும் பெரிய சாதனைகளை படைப்போம். ஒட்டுமொத்த தேசமும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறது என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நிதின்:
2023 ஆசியக் கோப்பையில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, அவர்களின் திறமையை வெளிப்படுத்தியது! சிறப்பாக பந்து வீசியதற்காக சிராஜுக்கு பாராட்டுக்கள்..
மகேஷ் பாபு:
ஆசியக் கோப்பை 2023 இல் உங்கள் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். சாம்பியன்ஷிப் மிகச் சிறப்பாக!
வெங்கடேஷ் டகுபதி:
2023 ஆசியக் கோப்பையில் சிறந்த வெற்றியைப் பெற்ற டீம் இந்தியாவுக்கு வாழ்த்துகள்!!
