Sri Lanka vs India: சிராஜ் வேகத்தில் சிக்கி சின்னா பின்னமான இலங்கை – 50 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை!

இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை 50 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.

Sri Lanka all out for 50 runs against India in Asia Cup Final 2023 at Colombo rsk

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி தற்போது கொழும்புவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை முகமது சிராஜ் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் ஏற்படுத்துவிட்டார். முதல் ஓவரிலேயே ஜஸ்ப்ரித் பும்ரா குசால் பெரேரா விக்கெட்டை கைப்பற்றினார்.

ஹாட்ரிக்கை தவறவிட்டு ஒரே ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த முகமது சிராஜ்!

பின்னர் வந்த முகமது சிராஜ் அந்த ஓவரை மெய்டனாக வீசினார். மூன்றாவது ஓவரில் பும்ரா 1 ரன் மட்டுமே கொடுத்தார். பின்னர், 4ஆவது ஓவரை வீச வந்த சிராஜ், முதல் பந்திலேயே பதும் நிசாங்கா விக்கெட்டை கைப்பற்றினார். நிசாங்கா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2ஆவது பந்தில் ரன் எடுக்காத போது 3ஆவது பந்தில் சதீர சமரவிக்ரமா விக்கெட்டை கைப்பற்றினார். சமரவிக்ரமா ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

 

 

இவரைத் தொடர்ந்து வந்த சரித் அசலங்கா ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த தனஞ்சயா டி சில்வா முதல் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில், அடுத்த பந்திலேயே கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஒரே ஓவரில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதோடு முதல் முறையாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.

SL vs IND: ரோகித் சர்மாவின் 250ஆவது ஒரு நாள் போட்டி: 2ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றுவாரா?

இதன் மூலமாக இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 5ஆவது ஓவரை பும்ரா மெய்டனாக வீசினார். அதன் பிறகு சிராஜ் 6ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில், 4ஆவது பந்தில் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலமாக 15 பந்துகளில் (கிரிக்பஸ்) 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.  ஆனால், அவர் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்று ஹாட்ஸ்டாரில் தகவல் தெரிவிக்கப்பட்டதுஒரு கட்டத்தில் இலங்கை 6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன் பிறகு துனித் வெல்லலகே மற்றும் துஷான் குசால் மெண்டிஸ் இருவரும் இணைந்து 17 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். அப்போது, வந்த சிராஜ், மெண்டிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலமாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார்.

Sri Lanka vs India: மழையால் போட்டி தாமதம்: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா வந்து பந்து வீசினார். கடைசி 3 விக்கெட்டையும் ஹர்திக் பாண்டியா கைப்பற்றி அசத்தியுள்ளார். இறுதியாக இலங்கை 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக குறைந்த ரன்கள் எடுத்த மோசமான அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக ஒருநாள் போட்டிகளில் இலங்கை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 43 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 55 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 67 ரன்களும், இந்தியாவிற்கு எதிராக 73 ரன்களும் (திருவனந்தபுரம், 2023) எடுத்து மோசமான சாதனை படைத்திருக்கிறது.

Asia Cup Final: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!

இலங்கை படைத்த மோசமான சாதனைகளின் பட்டியல்:

இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் குறைவான ரன்கள் எடுத்த அணிகள்:

50 ரன்கள் – இலங்கை, கொழும்ப், 2023

58 ரன்கள் – வங்கதேசம், மிர்பூர், 2014

65 ரன்கள் – ஜிம்பாப்வே, ஹராரே, 2005

73 ரன்கள் – இலங்கை, திருவனந்தபுரம், 2023
 

ஒருநாள் போட்டி இறுதிப் போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்த அணிகள்:

50 ரன்கள் – இலங்கை, எதிரணி இந்தியா, கொழும்பு, 2023

54 ரன்கள் – இந்தியா, எதிரணி இலங்கை, ஷார்ஜா, 2000

78 ரன்கள் – இலங்கை, எதிரணி பாகிஸ்தான், ஷார்ஜா, 2002

81 ரன்கள் – ஓமன் எதிரணி நமீபியா,

81 Oman vs Namibia விண்ட்ஹோக், 2019

பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகள்:

6/4, ஸ்டூவர்ட் பின்னி (இந்தியா) – வங்கதேசம், 2014

6/12, அனில் கும்ப்ளே (இந்தியா) – வெஸ்ட் இண்டீஸ், 1993

6/19, ஜஸ்ப்ரித் பும்ரா (இந்தியா) – இங்கிலாந்து, 2002

6/21, முகமது சிராஜ் (இந்தியா) – கொழும்பு, 2023

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றி பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 1990 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த போட்டியில் 26 விக்கெட்டுகள் கைப்பற்றி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

குறைவான ஓவர்களில் ஆல் அவுட்டான அணிகள்:

13.5 ஓவர்கள் – ஜிம்பாப்வே – ஆப்கானிஸ்தான், 2017

15.2 ஓவர்கள் – இலங்கை – இந்தியா, கொழும்பு, 2023

15.4 ஓவர்கள் – ஜிம்பாப்வே – இலங்கை, கொழும்பு, 2021

16.5 ஓவர்கள் – இலங்கை – பாகிஸ்தான், 2002

ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதில், பல்லேகலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.

கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதில், சிராஜ் 6 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள், பும்ரா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios