ஹாட்ரிக்கை தவறவிட்டு ஒரே ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த முகமது சிராஜ்!

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Mohammed Siraj Takes 4 Wickets in A Single over against Sri Lanka in Asia Cup Final 2023 at Colombo rsk

ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணியில் மஹீஷ் தீக்‌ஷனா காயம் காரணமாக இந்தப் பொட்டியில் இடம் பெறாத நிலையில், அவருக்குப் பதிலாக துஷான் ஹேமந்தா அணியில் இடம் பெற்றுள்ளார்.

SL vs IND: ரோகித் சர்மாவின் 250ஆவது ஒரு நாள் போட்டி: 2ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றுவாரா?

இதே போன்று இந்திய அணியில் காயம் காரணமாக அக்‌ஷர் படேல் இடம் பெறாத நிலையில், அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரின் 3ஆவது பந்தில் பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

Sri Lanka vs India: மழையால் போட்டி தாமதம்: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!

இவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் களமிறங்கினார். முதல் ஓவரில் மட்டும் ஒரு விக்கெட் இழப்பிற்கு இலங்கை 7 ரன்கள் எடுத்திருந்தது. 2ஆவது ஓவரை முகமது சிராஜ் மெய்டனாக வீசினார். மூன்றாவது ஓவரில் பும்ரா 1 ரன் மட்டுமே கொடுத்தார். பின்னர், 4ஆவது ஓவரை வீச வந்த சிராஜ், முதல் பந்திலேயே பதும் நிசாங்கா விக்கெட்டை கைப்பற்றினார். நிசாங்கா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2ஆவது பந்தில் ரன் எடுக்காத போது 3ஆவது பந்தில் சதீர சமரவிக்ரமா விக்கெட்டை கைப்பற்றினார். சமரவிக்ரமா ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

Sri Lanka vs India: மஹீஷா தீக்‌ஷனா விலகல்: டிராபியை கைப்பற்ற டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்!

இவரைத் தொடர்ந்து வந்த சரித் அசலங்கா ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த தனஞ்சயா டி சில்வா முதல் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில், அடுத்த பந்திலேயே கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஒரே ஓவரில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதோடு முதல் முறையாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.

Asia Cup Final: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!

இதன் மூலமாக இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 5ஆவது ஓவரை பும்ரா மெய்டனாக வீசினார். அதன் பிறகு சிராஜ் 6ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில், 4ஆவது பந்தில் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலமாக 15 பந்துகளில் (கிரிக்பஸ்) 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.  ஆனால், அவர் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்று ஹாட்ஸ்டாரில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எது எப்படியோ சிராஜ் சாதனை படைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இலங்கை 6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

 

 

 

ஒரு நாள் போட்டிகளில் 6 விக்கெட் இழந்து குறைந்த ரன்கள் எடுத்த அணிகள்:

2013- 6 விக்கெட்டிற்கு 10 ரன்கள் – கனடா – நெட் கிங் சிட்டி

2003 - 6 விக்கெட்டிற்கு 12 ரன்கள் – கனடா – இலங்கை

2023 - 6 விக்கெட்டிற்கு 12 ரன்கள் – இந்தியா – இலங்கை

2012 - 6 விக்கெட்டிற்கு 13 ரன்கள் – இலங்கை – தென் ஆப்பிரிக்கா

முதல் 10 ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீர்ரகள் (2002 முதல்)

முகமது சிராஜ் – 5 விக்கெட்டுகள், எதிரணி இலங்கை, கொழும்பு – 2023

ஜவஹல் ஸ்ரீநாத் – 4 விக்கெட்டுகள், எதிரணி இலங்கை, ஜோகன்னஸ்பர்க், 2003

புவனேஸ்வர் குமார் – 4 விக்கெட்டுக, எதிரணி இலங்கை, போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2013

ஜஸ்ப்ரித் பும்ரா – 4 விக்கெட்டுகள், எதிரணி இங்கிலாந்து ஓவல், 2022

 

ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள்:

6/13 அஜந்த மெண்டிஸ், எதிரணி இலங்கை, கராச்சி2008

6/13 முகமது சிராஜ், எதிரணி இலங்கை, கொழும்பு, 2023

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios