இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியின் மூலமாக தனது 250ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்து வளர்ந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக முதல் முறையாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரையில் 249 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா இன்று இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலமாக சர்வதேச 250ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறார். அதோடு 450ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
Sri Lanka vs India: மழையால் போட்டி தாமதம்: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!
இதுவரையில் ரோகித் சர்மா 27 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது 28ஆவது ஆசிய கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார். இதுவரையில் 27 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 936 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் 33 ரன்கள் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரின் ஆசிய கோப்பை 971 ரன்கள் சாதனையை முறியடிப்பார். சச்சின் 23 போட்டிகளில் விளையாடி 971 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Sri Lanka vs India: மஹீஷா தீக்ஷனா விலகல்: டிராபியை கைப்பற்ற டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்!
விராட் கோலி 15 ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 742 ரன்கள் எடுத்துள்ளார். இது ஒருபுறம் இருக்க ஒரு கேப்டனாக ரோகித் சர்மா ஒரு முறை ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய வங்கதேசம் 222 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனினும், வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இன்று நடக்கும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ரோகித் சர்மா 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் டீம் இந்தியா 7 முறை ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது. இலங்கை 6 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
