Asianet News TamilAsianet News Tamil

Sri Lanka vs India: மழையால் போட்டி தாமதம்: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியானது மழையால் தாமதமாக தொடங்க உள்ளது.

India and Sri Lanka Asia Cup Final 2023 match delay due to rain at colombo rsk
Author
First Published Sep 17, 2023, 3:40 PM IST

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. கொழும்புவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது மஹீஷ் தீக்‌ஷனா காயமடைந்த நிலையில், உலகக் கோப்பை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக துஷான் ஹேமந்தா இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

Sri Lanka vs India: மஹீஷா தீக்‌ஷனா விலகல்: டிராபியை கைப்பற்ற டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்!

 

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

இலங்கை:

பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்தா, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரனா.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலிருந்து அக்‌ஷர் படேல் விலகல்!

இதே போன்று இந்திய அணியிலும் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் இதுவரையில் நடந்த ஒரு போட்டியில் கூட அவர் விளையாடாமால் நேரடியாக இறுதிப் போட்டியில் இடம் பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது.

Asia Cup Final: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!

இந்தப் போட்டி ரோகித் சர்மாவின் 250ஆவது ஒருநாள் போட்டி ஆகும். அதோடு, 450ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விட்டு விட்டு மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொழும்புவில் மழை பெய்து வரும் நிலையில், போட்டி தாமதமாக தொடங்க உள்ளது. தொடர்ந்து மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் டேக்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Asia Cup 2023 Final: ஆசிய கோப்பை டிராபியை கையில் ஏந்தப் போகும் அந்த கேப்டன் யார்? டீம் எது?

Follow Us:
Download App:
  • android
  • ios