ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலிருந்து அக்‌ஷர் படேல் விலகல்!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் காயமடைந்த நிலையில், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Axar Patel is Ruled out of Asia Cup Final against Sri Lanka at Colombo rsk

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 16ஆவது ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் என்று ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் வெளியேறின.

Asia Cup Final: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!

இதையடுத்து பாகிஸ்தான், இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த சுற்றில் நடந்த போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் வெளியேறியதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க இருக்கிறது.

Asia Cup 2023 Final: ஆசிய கோப்பை டிராபியை கையில் ஏந்தப் போகும் அந்த கேப்டன் யார்? டீம் எது?

ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததன் மூலமாக ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் அணிகளின் ரேங்கிங் பட்டியலில் இந்திய அணி 2ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் நம்பர் 1 அணியாக முன்னேறியிருக்கும்.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசியாக 6 ரன்களில் தோல்வி அடைந்தது. இதில், சுப்மன் கில் 121 ரன்கள் குவித்தார். அக்‌ஷர் படேல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியின் போது அக்‌ஷர் படேலுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் தொடர்ந்து விளையாடினார். இறுதியாக அவர் ஆட்டமிழந்தார்.

ODI World Cup 2023: இந்தியாவிற்கு லக் மேல லக்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து நசீம் ஷா விலகல்?

இந்த நிலையில், தான் அக்‌ஷர் படேல் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பியுள்ளார். இன்று கொழும்புவில் நடக்கும் போட்டிக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார். எனினும் இன்றைய போட்டியில் ஆடும் பிளேயிங் 11ல் அவர் இடம் பெறுவாரா என்றால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான்.

ODI World Cup 2023: உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios