ODI World Cup 2023: இந்தியாவிற்கு லக் மேல லக்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து நசீம் ஷா விலகல்?
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. இதில், முதல் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் மழையின் காரணமாக ரிசர்வ் டேயில் நடத்தப்பட்டது.
ODI World Cup 2023: உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது. இறுதியாக 128 ரன்கள் மட்டுமே எடுத்து 228 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயமடைந்தார். ஹரிஷ் ராஃப்பிற்கும் காயம் ஏற்பட்டது. மேலும், அகா சல்மான் பேட்டிங்கின் போது முகத்தில் பலத்த அடிபட்டது.
இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக நடந்த 4ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் நசீம் ஷா, ஹரிஷ் ராஃப், அகா சல்மான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது. இதுவரையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் 2 முறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தியா நடத்தும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 ஒரு நாள் கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. அக், 5 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகிறன. இந்த தொடர் சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ, புனே, தர்மசாலா உள்ளிட்ட 10 மைதானங்களில் போட்டி நடைபெற உள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்க இருக்கிறது.
BAN vs IND, Asia Cup 2023: ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்தியராக சுப்மன் கில் படைத்த புதிய சாதனை!
இந்த நிலையில் தான் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள்:
அக்டோபர் 06 – பாகிஸ்தான் – நெதர்லாந்து – ஹைதராபாத் – 2 மணி
அக்டோபர் 10 – பாகிஸ்தான் – இலங்கை – ஹைதராபாத் – 2 மணி
அக்டோபர் 14 – பாகிஸ்தான் – இந்தியா – அகமதாபாத் – 2 மணி
அக்டோபர் 20 – பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா – பெங்களுரு – 2 மணி
அக்டோபர் 23 – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – சென்னை – 2 மணி
அக்டோபர் 27 – பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா – சென்னை – 2 மணி
அக்டோபர் 31 – பாகிஸ்தான் – வங்கதேசம் – கொல்கத்தா – 2 மணி
நவம்பர் 04 – பாகிஸ்தான் – நியூசிலாந்து – பெங்களூரு – 10.30 மணி
நவம்பர் 11 – பாகிஸ்தான் – இங்கிலாந்து – கொல்கத்தா – 2 மணி