Bangladesh vs India: 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசிய கோப்பையில் வங்கதேசத்திடம் அடி வாங்கிய இந்தியா!

இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Bangladesh beat India again in Asia Cup 2023 after 11 years rsk

வங்கதேசம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 சுற்று போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடி 265 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

BAN vs IND, Asia Cup 2023: ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்தியராக சுப்மன் கில் படைத்த புதிய சாதனை!

பின்னர், 266 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய விளையாடியது. இதில், தொடக்கத்திலேயே ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் 14 ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அறிமுக வீரர் திலக் வர்மா 5 ரன்களில் வெளியேற அடுத்து வந்த கேஎல் ராகுல் 19 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து வந்த இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷான் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் அவுட்டானார்.

BAN vs IND, Shubman Gill: விராட் கோலியின் சதம் சாதனையை முறியடித்த இளவரசன் சுப்மன் கில்!

அடுத்து ரவீந்திர ஜடேஜா 7 ரன்களில் ஆட்டமிழக்க, ஒருநாள் போட்டியில் தனது 6ஆவது சதத்தை பதிவு செய்த சுப்மன் கில் 133 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 121 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால், கடைசி வரை நின்று அணிக்கு வெற்றி தேடிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஏமாற்றம் அளித்தார். இவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் 7 ரன்களில் வெளியேற அடுத்து, அக்‌ஷர் படேலும் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கடைசியாக வந்த முகமது ஷமி 6 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக இந்தியா 49.5 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சூப்பர் 4 சுற்றில் இதுவரையில் ஒரு வெற்றியை கூட பெறாத வங்கதேச அணி முதல் வெற்றியோடு நாடு திரும்ப உள்ளது.

BAN vs IND: இந்திய அணிக்கு ஆட்டம் காட்டிய ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய்; வங்கதேச 265 ரன்கள் குவிப்பு!

இது ஒரு புறம் இருக்க, இந்தியாவிற்கு எதிராக விளையாடிய கடைசி 4 ஒரு நாள் போட்டிகளில் வங்கதேச அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 13 போட்டிகளில் முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், இந்தியாவிற்கு எதிராக கடந்த 2007ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs BAN போட்டியில் கையில் கூல்டிரிங்ஸ் எடுத்துக் கொண்டு வேடிக்கையாக ஓடி வந்த கோலி; வைரலாகும் வீடியோ!

இதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்புவில் நடந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் வங்கதேச அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டிகளில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 29 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். முஸ்தாஃபிஜூர் ரஹ்மான் 25 விக்கெட்டுகளும், மோர்டாஸா 23 விக்கெட்டுகளும், முகமது ரபீக் 18 விக்கெட்டுகளும், அஜித் அகர்கர் 16 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சக்கையாக பிழிந்த கிளாசென்: 83 பந்தில் 13 பவுண்டரி, 13 சிக்ஸருடன் 174 ரன்கள் குவித்து சாதனை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios