IND vs BAN போட்டியில் கையில் கூல்டிரிங்ஸ் எடுத்துக் கொண்டு வேடிக்கையாக ஓடி வந்த கோலி; வைரலாகும் வீடியோ!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியின் போது விராட் கோலி கூல்டிரிங்ஸ் எடுத்து வரும் போது வேடிக்கையாக ஓடி வந்து பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி தற்போது கொழும்புவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணி பேட்டிங் ஆடி வருகிறது. இதில் தொடக்க வீரர்களாக தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். ஆனால், லிட்டன் தாஸ் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஷமி பந்தில் கிளீன் போல்டானார்.
அடுத்து மற்றொரு தொடக்க வீரர் தன்ஷித் ஹசன் 13 ரன்களில் ஷர்துல் தாக்கூர் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த அனாமுல் ஹக் 4 ரன்களில் வெளியேறினார். இவர், இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி ஆரம்ப காலகட்டத்தில் வைத்திருந்த ஹேர்ஸ்டைலில் வந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கேப்டன் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர், நின்னு நிதானமாக விக்கெட் கொடுக்காமல் ரன்கள் சேர்த்தார்.
இதற்கிடையில், மெஹிடி ஹசன் மிராஸ் களமிறங்கி அவர் 14 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 14 ஓவர்கள் முடிவில் டிரிங்ஸ் பிரேக் விடப்பட்டது. அப்போது விராட் கோலி கூல்டிரிங்ஸ் கொண்டு வந்தார். அப்போது அவர் மைதானத்திற்குள் வரும் போது ரசிகர்களுக்கு வேடிக்கை காட்டும் விதமாக ஓடி வந்துள்ளார்.
பொதுவாக விராட் கோலி என்றால் மைதானத்தில் நக்கல், நய்யாண்டி எல்லாம் இருக்கும். அதற்கும் மேலாக பாடலுக்கு நடனமும் ஆடுவார். இலங்கைக்கு எதிரான போட்டியின் போது பீல்டிங்கில் நின்றிருந்த விராட் கோலி லுங்கி டான்ஸ் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது. ஆனால், இக்கட்டான சூழலிலும், பேட்டிங் ஆடும் போதும் விராட் கோலி வேறு விதமாக ஆக்ரோஷமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Asia Cup
- Asia Cup 2023
- BAN vs IND Live
- Bangladesh
- Colombo
- IND vs BAN
- IND vs BAN Cricket Live Match
- IND vs BAN Live
- India
- India vs Bangladesh
- KL Rahul
- Mohammed Shami
- Nasum Ahmed
- Prasidh Krishna
- Rain
- Rohit Sharma
- Shakib Al Hasan
- Shardul Thakur
- Shubman Gill
- Super 4
- Super 4 ODI
- Tilak Varma
- Towhid Hridoy
- Virat Kohli
- Virat Kohli Brinks Cool Drinks
- Virat Kohli Carry Drinks
- Virat Kohli Running Video