IND vs BAN: திலக் வர்மா அறிமுகம், சூர்யகுமார் யாதவ், பிரஷித் கிருஷ்ணா, ஷமிக்கு வாய்ப்பு: இந்தியா பவுலிங்!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று இன்றுடன் முடிவடைகிறது. இதன் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியை பொறுத்த வரையில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திலக் வர்மா இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகிறார். ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள திலக் வர்மா இதுவரையில் 7 டி20 போட்டிகளில் விளையாடி 174 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். மேலும், பந்து வீசி ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார். முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வங்கதேச அணியில் தன்சிம் ஹசன் ஷாகிப் இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகிறார்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரஷித் கிருஷ்ணா.
வங்கதேசம்:
லிட்டன் தாஸ் (விக்கெட் கிப்பர்), தன்ஷித் ஹசன், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹீத் ஹிரிடோய், ஷமீம் ஹூசைன், மெஹிடி ஹசன் மிராஸ், மஹதி ஹசன், நசும் அகமது, தன்ஷிம் ஹசன் ஷாகிப், முஸ்தஃபிஜூர் ரஹ்மான்
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார்.