IND vs BAN: இலங்கைக்கு எதிராக பரிதாப தோல்வி: புள்ளிப்பட்டியலில் சரிந்த பாகிஸ்தான், இந்தியா 2ஆது இடம்!
இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் ரேங்கிங் பட்டியலில் 2ஆவது இந்தியா முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றன. முதலில் நடந்த லீக் போட்டியில் நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறின.
இதையடுத்து இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகள் முதல் 3 சூப்பர் 4 போட்டி சுற்று போட்டியில் வெற்றி பெற்றன. 4ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின.
இதில், இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி நடந்தது. இதில், முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய இலங்கை கடைசி பந்தில் த்ரில் வெற்றி ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததன் மூலமாக ஐசிசி ஆண்கள் ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா 116 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னதாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டி அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா நம்பர் ஒன் இடம் பிடிப்பதற்கு இன்று நடக்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும்.
Sri Lanka vs Pakistan, Wide: இதெல்லாம் வைடா, நீயெல்லாம் ஒரு நடுவரா? கோபம் கொண்ட இலங்கை ரசிகர்கள்!
மேலும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் ஐசிசி ஒருநாள் அணிகள் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடம் பிடிக்கும். தற்போது 118 ரேட்டிங்கில் ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.