Asianet News TamilAsianet News Tamil

Sri Lanka vs Pakistan, Wide: இதெல்லாம் வைடா, நீயெல்லாம் ஒரு நடுவரா? கோபம் கொண்ட இலங்கை ரசிகர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான 5ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை வீரர் பதிரனா வீசிய பந்திற்கு நடுவர் வைடு கொடுத்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் கோபம் கொண்டனர்.

Umpire gives wide to mohammad rizwan against Sri Lanka and fans get angry for wrong decision rsk
Author
First Published Sep 14, 2023, 11:24 PM IST

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி தற்போது கொழும்புவில் நடந்தது. இதில், மழை குறுக்கீடுப் பிறகு 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதை மனதில் வைத்து பாகிஸ்தான் விளையாடியது.

Sri Lanka vs Pakistan, Zaman Khan: மலிங்கா மாதிரியே பந்து வீசும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜமான் கான்!

தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் 69 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் துனித் வெல்லலகே பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். முகமது ஹரிஷ் 3 ரன்களில் ஆட்டமிழக்க முகமது நவாஸ் 12 ரன்களில் அவுட்டானார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 27.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

Sri Lanka vs Pakistan: கடைசில காட்டு காட்டுன்னு காட்டிய முகமது ரிஸ்வான் – நிம்மதி பெருமூச்சுவிட்ட பாகிஸ்தான்!

இதையடுத்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடத் தொடங்கினர். இந்த ஜோடி 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இப்திகார் அகமது 40 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அடுத்து வந்த ஷதாப் கான் 3 ரன்களில் வெளியேற கடைசியாக ஷாஹீன் அஃப்ரிடி களமிறங்கினார்.

ஒரே வருடத்தில் 2 திருமணம்: 2ஆவது முறையாக திருமணத்திற்கு தயாராகும் ஷாஹீன் அஃப்ரிடி!

ஒரு புறம் அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஒருகட்டத்தில் அவரது எல்பிடபிள்யூ வாய்ப்பையும் இலங்கை வீரர்கள் ரெவியூ எடுக்காமல் கோட்டைவிட்டனர். ஆனால், டிவி ரீப்ளேயில் எல்பிடபிள்யூ சரியான முறையில் காட்டியது. ஒரு கட்டத்தில் ரிஸ்வான் 61 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியின் 38ஆவது ஓவரை பதிரனா வீசினார். அந்த ஓவரின் 2ஆவது பந்தில் கொஞ்சம் வைடாக வீசினார். ஆனால், அந்தப் பந்தையும் ரிஸ்வான் அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிலிருந்து விலகி வந்தார்.

Sri Lanka vs Pakistan: விட்டுவிட்டு மழை: இலங்கை – பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்: பரிதாப நிலையில் பாகிஸ்தான்!

இதற்கு நடுவர் வைடு கொடுத்தார். உண்மையில் அது வைடு கிடையாது. அப்படியிருக்கும் போது இதெல்லாம் வைடா என்று நடுவர் மீது இலங்கை ரசிகர்கள் கோபம் கொண்டனர். அப்போது கூட கிரிக்கெட் வர்ணனையாளர்கள், இதெல்லாம் வைடு கிடையாதே என்று கூறினர். இதையடுத்து அதிரடியாக விளையாடி ரிஸ்வான் கடைசில 73 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 86* ரன்கள் சேர்த்தார்.

Sri Lanka vs India, Fans Fight: இலங்கை தோல்வி: இந்திய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட இலங்கை ரசிகர்கள்!

இறுதியாக பாகிஸ்தான் 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டும், மஹீஷ் தீக்‌ஷனா ஒரு விக்கெட்டும், துனித் வெல்லலகே ஒரு விக்கெட்டும், மதீஷா பதிரனா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

SL vs PAK: பாகிஸ்தானுக்கு சோதனை மேல் சோதனை: சவுத் ஷகீலுக்கு காய்ச்சல்; 5 மாற்றங்களுடன் களமிறங்கிய பாபர் அசாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios