ஒரே வருடத்தில் 2 திருமணம்: 2ஆவது முறையாக திருமணத்திற்கு தயாராகும் ஷாஹீன் அஃப்ரிடி!
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 2ஆவது முறையாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி. இவர், பந்து வீச வந்துவிட்டாலே எதிரணி வீரர்களுக்கு கதி கலங்கும் என்று கூட சொல்லலாம். முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்துக் கொடுக்கும் ஆற்றல் கொண்டவர். பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இதுவரையில் 42 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் இடம் பெற்று விளையாடி வருகிறது. இதில், இதுவரையில் நேபாள், இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் விளையாடியுள்ளது. மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், தற்போது 5ஆவது போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதுவரையில் 8 விக்கெட்டுகள் ஷாஹீன் அஃப்ரிடி கைப்பற்றியிருக்கிறார். தற்போது கொழும்பு மைதானத்தில் நடந்து வரும் சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். கனமழை காரணமாக போட்டியானது 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
Sri Lanka vs India, Fans Fight: இலங்கை தோல்வி: இந்திய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட இலங்கை ரசிகர்கள்!
கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார். தற்போது இவருக்கு 23 வயதாகிறது. இந்த நிலையில் ஷாஹின் அஃப்ரிடி 2ஆவது முறையாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், வரும் 17 ஆம் தேதி உடன் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு வரும் 19 ஆம் தேதி ஷாஹீன் அஃப்ரிடி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்சா அப்ரிடியை திருமணம் செய்து கொண்டார். இதில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் அப்போது வெளியானது.
இந்த நிலையில், தான் தனது மனைவி அன்சாவை ஷாஹீன் அஃப்ரிடி 2ஆவது முறையாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக ஒரே வருடத்தில் 2ஆவது முறையாக ஷாஹின் அப்ஃரிடி திருமணம் செய்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sri Lanka vs Pakistan: நடையை கட்டுமா பாகிஸ்தான்? ரன் ரேட் யாருக்கு சாதகம்?