பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை பெய்த நிலையில் போட்டியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மைதானத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இதற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ரத்து செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு இருக்கிறது. ஆசிய கோப்பை சூப்பர் சுற்றின் 5ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது கனமழை காரணமாக மாலை 5.15 மணிக்கு தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தார்.

கண்டிப்பாக இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாகிஸ்தான் இதுவரையில் அணியில் எந்த மாற்றமு செய்யவில்லை. ஆனால், இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது அடைந்த தோல்வி மற்றும் வீரர்கள் காயம் காரணமாக இந்தப் போட்டியில் 5 மாற்றங்களை செய்துள்ளார்.

Sri Lanka vs India, Fans Fight: இலங்கை தோல்வி: இந்திய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட இலங்கை ரசிகர்கள்!

பாகிஸ்தான் அணியில் ஹரிஷ் ராஃப், நசீம் ஷா, அகா சல்மான் ஆகியோர் காயமடைந்த நிலையில் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், இமாம் உல் ஹக் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இந்தப் போட்டியில் எடுக்கப்படவில்லை. மாறாக, அப்துல்லா ஷாஃபிக், முகமது ஹரிஷ், முகமது நவாஸ், முகமது வாசீம் ஜூனியர் மற்றும் ஜமான் கான் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். இதே போன்று இலங்கை அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி திமுத் கருணாரத்னே மற்றும் கசுன் ரஜிதா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக குசல் பெரேரே மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

SL vs PAK: பாகிஸ்தானுக்கு சோதனை மேல் சோதனை: சவுத் ஷகீலுக்கு காய்ச்சல்; 5 மாற்றங்களுடன் களமிறங்கிய பாபர் அசாம்!

இந்த நிலையில், டாஸ் வென்று பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் தற்போது வரையில், 27.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. இதில், அதிகபட்சமாக தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் 69 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் துனித் வெல்லலகே பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். முகமது ஹரிஷ் 3 ரன்களில் ஆட்டமிழக்க முகமது நவாஸ் 12 ரன்களில் அவுட்டானார்.

Sri Lanka vs Pakistan: நடையை கட்டுமா பாகிஸ்தான்? ரன் ரேட் யாருக்கு சாதகம்?

விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்த நிலையில், தான் தற்போது மழை பெய்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே மழை நிற்கவே வீரர்கள் உள்ளே வந்தனர். ஆனால், அதற்குள்ளாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரண்மாக மீண்டும் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே மழையின் காரணமாக 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியானது தற்போது 42 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.