BAN vs IND: சூர்யகுமார் யாதவ், ஷமி, ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு? இந்தியா பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
வங்கதேச அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஷமி, பிரஷித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் என்று 6 அணிகள் இடம் பெற்று ஆசிய கோப்பை தொடரானது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. லீக் போட்டிகள் முடிந்த சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. வங்கதேச அணியோ இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியும் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3ஆவது இடம் பிடித்தன. இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 252 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Sri Lanka vs Pakistan, Wide: இதெல்லாம் வைடா, நீயெல்லாம் ஒரு நடுவரா? கோபம் கொண்ட இலங்கை ரசிகர்கள்!
இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 6ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதுகு பிடிப்பு காரணமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இடம் பெறாத ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது உடல் தகுதி பெற்றுள்ள நிலையில், நேற்று பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படமும், வீடியோவும் வெளியானது.
இந்தியா – வங்கதேசம் போட்டியில் எதிர்பார்ப்பு:
ரோகித் சர்மா – சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்பிருக்கிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது வரிசையில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஎல் ராகுல் 4ஆவது வரிசையில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 5ஆவது வரிசையில் களமிறங்கி 39 ரன்கள் எடுத்தார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராகுல் 4ஆவதாக களமிறங்கி 111* ரன்கள் எடுத்தார்.
ஒரே வருடத்தில் 2 திருமணம்: 2ஆவது முறையாக திருமணத்திற்கு தயாராகும் ஷாஹீன் அஃப்ரிடி!
டி20 போட்டியில் நம்பர் 1 வீரரான சூர்யகுமார் யாதவ் இதுவரையில் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இஷான் கிஷான் ஏற்கனவே உலகக் கோப்பை 2023 க்கு தயாராக இருப்பதால், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கொழும்பு மைதானம் சுழற்பந்துக்கு சாதகம் என்றால் அக்ஷர் படேல் இந்தப் போட்டியிலும் இடம் பெறுவார்.
இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் அல்லது சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா அல்லது ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது முகமது ஷமி.