24 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி பழி தீர்த்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், ஜஸ்ப்ரித் பும்ரா முதல் விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து முகமது சிராஜ் ஒரே ஓவரில் இலங்கையின் அணியின் முக்கியமான விக்கெட்டுகளான பதும் நிசாங்கா, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, தசுன் ஷனாகா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு நாள் கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அடுத்து ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் கைப்பற்ற இறுதியாக, இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15.2 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், குசல் பெரேரா, சதிர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோர் டாப் பேட்ஸ்மேன்கள் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றி இந்தியா சாதனை!
இதன் மூலமாக இலங்கையை 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பழிக்கு பழி வாங்கியுள்ளது. இதற்கு முன்னதாக 1999 ஆம் ஆண்டு நடந்த கோகொ கோலா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 54 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் ஜெயசூர்யா 161 பந்துகளில் 21 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 189 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. பின்னர், 300 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது.
இதில், கேப்டன் சவுரவ் கங்குலி 3 ரன்னிலும், சச்சின் 5 ரன்னிலும், யுவராஜ் சிங் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த வினோத் காம்ப்ளி 3 ரன்னிலும், ஹேமங் பதானி 9 ரன்னிலும், விஜய் தாஹியா 4 ரன்னிலும், ராபி சிங் 11 ரன்னிலும் ஆட்டமிழக்க இறுதியா இந்தியா 26.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்து 245 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் அதுவும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாட்ரிக்கை தவறவிட்டு ஒரே ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த முகமது சிராஜ்!
