இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக ஆட்டநாயகனாக பெற்ற ஐந்தாயிரம் டாலர் பரிசு தொகையை முகமது சிராஜ், மைதான ஊழியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் ஆடியது. முதல் ஓவரிலேயே குசால் பெரேரா விக்கெட்டை இழந்தது. ஆனால், அதன் பிறகு வந்து முகமது சிராஜ் வீசிய 4ஆவது ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றியதே போட்டிக்கு திருப்பு முனையாக அமைந்தது.
Sri Lanka vs India: 24 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையை பழி தீர்த்த இந்தியா; கங்குலி ஹேப்பி அண்ணாச்சி!
அடுத்து முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக முதல் இந்திய வீரராக ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். அதோடு, ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் கைப்பற்றவே இலங்கை 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னதாக நடந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரும் இணைந்து வெற்றி தேடிக் கொடுத்தனர். இதன் மூலமாக இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ஆம், அதிக முறை ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றிய அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சிராஜிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதில், அவருக்கு கிடைத்த பரிசுத் தொகையான 5 ஆயிரம் டாலரை (இந்திய மதிப்பி ரூ.415451.75) மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். ஆனால், இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மைதான ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றி இந்தியா சாதனை!
உண்மையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும், இந்தியா – இலங்கை போட்டியும், இலங்கை – பாகிஸ்தான் போட்டியும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியும் நடக்க முக்கிய காரணமே மைதான ஊழியர்கள் தான். அவர்கள் இல்லையென்றால், மழையின் காரணமாக எந்தப் போட்டியும் நடந்திருக்காது. இது குறித்து பேசிய முகமது சிராஜ் கூறியிருப்பதாவது: தன்னை விட இந்த பரிசுத் தொகையானது மைதான ஊழியர்களுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.
அவர்கள், தங்களது பணியினை சரிவர செய்யவில்லை என்றால், இந்த ஆசிய கோப்பை தொடரானது வெற்றிகரமாக முடிந்திருக்காது என்று கூறினார். முகமது சிராஜின் இந்த செயலுக்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மழைக்காலங்களில் கொழும்பு மற்றும் பல்லேகலே மைதானங்களை ஆசிய கோப்பை போட்டிக்கு தயார்படுத்த கடுமையாக உழைத்த மைதான பணியாளர்களுக்கு 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அறிவித்தார். அதற்கான காசோலையை மைதான அதிகாரியிடம் ஜெய் ஷா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காசோலையுடன் மைதான ஊழியர்கள் செல்ஃபி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
