Si Lanka vs India: வங்கதேச போட்டியில் தோல்வி, ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித்!
ஒரு இந்திய கேப்டனாக ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால், ஒவ்வொரு ஓவருக்கும் இலங்கை அணிக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில், பெரேரா ஆட்டமிழந்தார். 2ஆவது ஓவர் மெய்டனாக வீசப்பட்டது. 3ஆவது ஓவரில் 1 ரன் எடுக்கப்பட்டது. 4ஆவது ஓவரில் தான் இலங்கை அணியின் ஒட்டுமொத்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்தனர்.
முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரில் மட்டுமே 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். பதும் நிசாங்கா, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா என்று 4 முக்கியமான விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில், சில்வா 4 ரன்களிலும், நிசாங்கா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க மற்ற இருவரும் டக் அவுட்டில் வெளியேறினார்.
மறுபடியும், 6ஆவது ஓவரில் கேப்டன் தசுன் ஷனாகாவை டக் அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பிறகு 12 ஆவது ஓவரில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். இப்படி இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரையும் முகமது சிராஜ் ஆட்டமிழக்கச் செய்து இலங்கை ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என்று ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
எஞ்சிய 3 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா கைப்பற்றவே இலங்கை 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் ஆட்டமிழந்தது. இதில், பும்ரா 1 விக்கெட்டும், பாண்டியா 3 விக்கெட்டும் கைப்பற்ற, முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். பின்னர் ஆடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக 8ஆவது முறையாக ஆசிய கோப்பையை டீம் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், தான், ஒரு கேப்டனாக ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
Sri Lanka vs India: 5 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய முகமது சிராஜ்!
ஒரு கேப்டனாக ரோகித் சர்மா 11 ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். ஆனால், எம்.எஸ்.தோனியோ 14 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து அதில் 9 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். இதே போன்று தான் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரனதுங்கா 13 போட்டிகளில் விளையாடி அதில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
Sri Lanka vs India: 24 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையை பழி தீர்த்த இந்தியா; கங்குலி ஹேப்பி அண்ணாச்சி!
ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஒரு கேப்டனாக தோனி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. ஆனால், ரோகித் சர்மா ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். அதுவும், கடந்த 15 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.