SL vs IND: பாஸ்போர்ட்டை ஹோட்டல் அறையில் மறந்து வைத்துவிட்ட வந்த ரோகித் சர்மா – கிண்டல் செய்த வீரர்கள்!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது பாஸ்போர்ட்டை ஹோட்டல் அறையிலேயே மறந்து வைத்துவிட்ட வந்ததைத் தொடர்ந்து சக வீரர்கள் அவரை கிண்டல் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அரையிறுதிப் போட்டியிலும் நேற்று நடந்த இறுதிப்போட்டியிலும் விளையாடிய இலங்கை அணியா இது என்று கேட்கும் வகையில் இலங்கை அணியின் பேட்டிங் இருந்தது.
முதலில் பேட்டிங் ஆடி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், குசால் பெரேரா, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோர் டக் அவுட் முறையில் வெளியேறினர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
SL vs IND: விராட் கோலி மாறி நடந்து காட்டிய இஷான் கிஷான் – வைரலாகும் வீடியோ!
பின்னர் இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து அதிக பந்துகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்தியா 8 ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது. ரோகித் சர்மா தனது 250ஆவது ஒரு நாள் போட்டியில் 2ஆவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றினார்.
இதையடுத்து இந்திய வீரர்கள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையை காலி செய்தனர். அப்போது ரோகித் சர்மாவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் பேருந்தில் ஏறினர். கடைசியாக ரோகித் சர்மா வந்தார். அப்போது அவர் தனது பாஸ்போர்ட்டை ஹோட்டல் அறையிலேயே வைத்துவிட்டு வந்துள்ளார். பேருந்தில் ஏறிய பிறகு தான் தனது பாஸ்போர்ட்டை ஹோட்டலிலேயே வைத்துவிட்டு வந்தது அவருக்கு ஞாபகம் வந்துள்ளது. இதனால், பேருந்தில் இருந்த சக வீரர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் சில நிமிடங்கள் ரோகித் சர்மா பேருந்தின் படிக்கட்டிற்கு அருகிலேயே நின்றுள்ளார்.
சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்கள் -ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!
அதன் பிறகு ஒரு ஊழியர் ரோகித் சர்மாவின் பாஸ்போர்ட்டை கொண்டு வந்து அவரிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.