Asianet News TamilAsianet News Tamil

ரோகித், கோலி, பும்ரா, பாண்டியாவிற்கு ஓய்வு? ஆஸ்திரேலியா சீரிஸில் யாருக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் சீரிஸில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Rohit Sharma, Virat Kohli, Jasprit Bumrah and Hardik Pandya may rest from IND vs AUS ODI Series? rsk
Author
First Published Sep 18, 2023, 5:26 PM IST

இந்தியாவில் 13ஆவது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடர் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

SL vs IND: பாஸ்போர்ட்டை ஹோட்டல் அறையில் மறந்து வைத்துவிட்ட வந்த ரோகித் சர்மா – கிண்டல் செய்த வீரர்கள்!

இந்த தொடர் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட 10 மைதானங்களில் நடக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் வரும் அக்,8 ஆம் தேதி நடக்கிறது.

IND s AUS: ஒருநாள் தொடரை கைப்பற்ற பிளானோடு வரும் ஆஸ்திரேலியா: ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட டீம் அறிவிப்பு!

ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி இன்று இரவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் வார்ம் அப் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், ஆசிய கோப்பை என்று விளையாடி வந்த இந்திய வீரர்கள் அடுத்ததாக மிகப்பெரிய தொடரான உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கின்றனர். இதனால், கடுமையான வேலைப்பளு காரணமாக இந்திய வீரர்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

SL vs IND: விராட் கோலி மாறி நடந்து காட்டிய இஷான் கிஷான் – வைரலாகும் வீடியோ!

அப்படி அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய வீரர்கள்:

சுப்மன் கில், இஷான் கிஷான், கேஎல் ராகுல் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி.

சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்கள் -ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!

Follow Us:
Download App:
  • android
  • ios