ஆஸி.யுடன் ஒருநாள் தொடர்: இந்திய அணியில் மீண்டும் அஸ்வின்! ரோஹித், கோலிக்கு இடம் இல்லை!
கடைசியாக ஜனவரி 2022 இல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட இடைவெளிக்குப் பின்பு அணிக்குத் திரும்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்களன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட இடைவெளிக்குப் பின் இடம்பிடித்துள்ளார்.
அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான கடைசி தயாரிப்பாக இந்தத் தொடர் அமைய உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் ரோஹித் இல்லாத நிலையில் கேஎல் ராகுல் அணியை வழிநடத்துவார்.
இருப்பினும், ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இறுதி ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். முதுகு வலி காரணமாக ஆசிய கோப்பையின் பிற்பாதியில் விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் போது காயத்தால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடமாட்டார். இறுதி ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படுவது உடற்தகுதியைப் பொறுத்தது.
அணி அறிவிப்பின் மிகப்பெரிய முடிவு, அஸ்வின் அணிக்குத் திரும்பியதுதான். ஆஸ்திரேலியாவுடனான தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் உலகக் கோப்பை அணியிலும் அவர் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
37 வயதான அஸ்வின் 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஜனவரி 2022 இல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அக்சர் படேல் ஆசியக் கோப்பை போட்டியின் போது காயம் அடைந்துள்ளதால், உலகக் கோப்பைக்கான அணியில் அவருக்குப் பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்ட வாய்ப்பு உள்ளது.
67 லட்சம் போச்சு! கூகுள் ஊழியரின் உல்லாச வாழ்க்கையில் மண் அள்ளி போட்ட கிரிப்டோகரன்சி!
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
கே.எல்.ராகுல் (கேப்டன் & விக்டெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்* (உடல்தகுதியைப் பொறுத்து), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி விவரம்:- பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித் , மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா
முழுவதும் இந்தியில் தான் இருக்கு... ஆத்திரத்தில் நிகழ்ச்சி நிரலை கிழித்தெறிந்த திருச்சி சிவா