ODI World Cup 2023: ஷதாப் கானுக்கு வாய்ப்பு மறுப்பு? உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் டீமில் யாருக்கு இடம்?
பாகிஸ்தான் அணியின் சிறந்த லெக் ஸ்பின்னரான ஷதாப் கானுக்கு உலகக் கோப்பைக்கான அணியில் இடம் மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியா நடத்தும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று 10 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கிறது.
India vs Australia: இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு: ஆஸ்திரேலியாவை தோற்கடிக்குமா இந்தியா?
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆசிய கோப்பை 20223 கிரிக்கெட் தொடரில் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வந்தது. பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக பாகிஸ்தான் திகழந்தது. ஆனால், அரையிறுதிப் போட்டியில் இலங்கையிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானின் லெக்ஸ்பின்னர் ஷதாப் கான், 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதே போன்று இலங்கைக்கு எதிரான போட்டியிலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஒட்டு மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி அவர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ஆஸி, சீரிஸ் தேவையில்லாத ஒன்று, இந்திய வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு உண்டு – வாசீம் அக்ரம் எச்சரிக்கை!
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சீனியர் வீரர்களின் பங்களிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாத நிலையில், கேப்டன் பாபர் அசாம் விரக்தியடைந்துள்ளார். அதில், ஒருவர் தான் ஷதாப் கான். இவர் துணை கேப்டனும் கூட. ஆதலால் தான் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவருக்குப் பதிலாக அப்ரார் அகமது இடம் பெற்றுள்ள நிலையில், ஷாகீன் அஃப்ரிடிக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நஷீம் ஷா காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது ஷதாப் கானும் இடம் பெறவில்லை. ஆகையால், உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அனுபவம் இல்லாத சில இளம் வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில், ஜமான் கான், ஷாநவாஸ் தஹானி, ஹசன் அலி ஆகியோர் இடம் பெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸி.யுடன் ஒருநாள் தொடர்: இந்திய அணியில் மீண்டும் அஸ்வின்! ரோஹித், கோலிக்கு இடம் இல்லை!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் உடன், தலைமை தேர்வாளர் இன்சமாம் மற்றும் கேப்டன் பாபர் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பிறகு உலகக் கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.